1489221527 3348
அசைவ வகைகள்

ஆட்டு ஈரல் பிரட்டல் செய்ய

தேவையான பொருட்கள்:

ஆட்டு ஈரல் – 1/2 கிலோ
பெரியவெங்காயம் – 2
பச்சைமிளகாய் – 4
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
தக்காளி – 2
மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
கறிமசலாதூள் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணய் – 2 ஸ்பூன்

செய்முறை:

ஈரலை சுத்தம்செய்து சிறிதாக நறுக்கி வைக்கவும். வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கவும். மிளகாயை இரண்டாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணய் ஊற்றி வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கி, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியவுடன் ஈரலை போட்டு உப்பு சேர்த்து பிரட்டவும்.

மஞ்சள்தூள், கறிமசால்தூள் சேர்த்து தேவையான உப்பு போட்டு கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். தண்ணீர் வற்றி ஈரல் வெந்தவுடன் இறக்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும். சுவையான ஈரல் பிரட்டல் தயார்.
1489221527 3348

Related posts

சுவையான சாஸ் வித் ஃபிஷ் செய்வது எப்படி

nathan

ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா

nathan

மசாலா மீன் கிரேவி

nathan

மட்டன் சுக்கா வறுவல்

nathan

முட்டை – சிக்கன் சப்பாத்தி ரோல்

nathan

ஆந்திரா சிக்கன் குழம்பு

nathan

முட்டை சில்லி

nathan

சுவையான முட்டை சுக்கா

nathan

உருளைக்கிழங்கு மீன் குழம்பு,

nathan