33.5 C
Chennai
Thursday, Aug 20, 2026
அலங்காரம்மேக்கப்

உதட்டுக்கு மெருகூட்டும் லிப்ஸ்டிக்

ld1328மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தும் வெளிப்படுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோலத்தான் உதடுகளுக்கும் உண்டு. அன்பை முத்தமாகவும் வெளிப்படுத்தலாம். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உதடுகள் அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும். அவர்களுக்காகவே இந்த டிப்ஸ்.

வைட்டமின் சத்துள்ள உணவுகள்:

உடலில் வைட்டமின் சத்து குறைபாடு ஏற்பட்டால் உதடுகளின் ஓரத்தில் புண் ஏற்படுகிறது. இந்த குறைபாட்டினை போக்க உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள், பழங்களை அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வைட்டமின் இ சத்துகள் நிறைந்த சன்ஸ்கீரின் லோஷனை தடவினாலும், புண் மற்றும் கொப்புளங்கள் மறையும். கொழுப்புச் சத்து குறையும்போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன. இதனால், உதடுகளில் வசேலின்( vaseline) தடவிக்கொள்ளலாம்.

உதடு வெடிப்புகள் குணமடைய:

அதிக குளிரோ, அதிக வெப்பமோ எதுவானாலும் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும், சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளும் ஏற்படும். அவர்கள் பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். வெண்ணெய் உடன் ஆரஞ்ச் பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவிவந்தால், வெடிப்புகள் சரியாக உதடுகள் மென்மையாகும்.

லிப்ஸ்டிக் போடும் கலை:

கண் ணிற்கு மை இடுவது போல உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவது என்பது இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக மாறிவருகிறது. நமது உதட்டிற்கு ஏற்ற லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்து போடுவது என்பது தனி கலை.சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும். ஆனால், மாநிறமாகவோ, கறுப்பாகவோ இருப்பவர்கள் சரியான கலர் லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்ய வேண்டும். கறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட்டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம். மாநிறமாக இருப்பவர்கள் இயற்கையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும்.

லிப் லைனர் உபயோகிக்கவும்:

லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப்லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல் ஒரே, சீராக அழகாக இருக்கும். லிப் லைனர் பயன்படுத்தும்போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுகளுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும். உதடுகள் பெரியதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக்கை போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.

உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக்கை போட்டுக்கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும். தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும். மேலும், உதடுகள் காய்ந்திருக்கிறது என்று அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்தால், எச்சிலில் இருக்கும் பாக்டீரியக்களால் உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும். இந்த முறைகளை பின்பற்றி உதடுகளை பராமரித்தால் அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன், நீங்களும் அழகு ராணியாக வலம் வரலாம்.

Related posts

ஆண்கள் அழகை பேணுவதில் கவனம் வேண்டும்!…

sangika

எண்ணெய் பசை அதிகமா இருக்கா?

nathan

அழகு அதிகரிக்க நகைகளை வெரைட்டிய போடுங்க…

nathan

அழகு குறிப்புகள்:மணப்பெண் அலங்காரம்!

nathan

குண்டாக இருப்பவர்கள், ஒல்லியாகத் தோற்றமளிக்க…

nathan

ஒருவர் எப்படிபட்ட பெண் ணை மணந்துகொண்டால் அவர் அதிர்ஷ்டசாலியாக வாய்ப்புள்ளது தெரியுமா?

sangika

ஸ்கின் டைப் சொல்லுங்க… மேக்கப் டைப் சொல்றோம்!

nathan

பண்டிகைகள் மற்றும் விழாக்களில் ஆண்களுக்கான அழகிய ஆடை எது தெரியுமா?..

sangika

ஆரோக்கியமான நகங்களுக்கு செய்ய வேண்டியவை!…

sangika