33.9 C
Chennai
Sunday, Jul 12, 2026
முகப் பராமரிப்பு

முகப்பருக்கள், தோல் சுருக்கம் போக்கி முகத்தின் நிறத்தை மேம்படுத்தும் கொத்தமல்லி!

கொத்தமல்லி இலை நமது சமையலை அலங்கரிப்பதற்கும், நல்ல வாசனையை சமையலுக்கு கொடுப்பதற்கும், சுவைக்காவும் தான் பயன்படுத்தியிருப்போம். ஆனால் கொத்தமல்லியை உங்களது சமையலை அலங்கரிப்பதற்கு மட்டுமின்றி உங்களை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தலாம் என்பது தெரியுமா?

இதில் மிக அதிகமான வாசனை அடங்கியுள்ளது. இது வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.இதன் வாசனை உங்களது மனதை ரிலாக்ஸ் செய்யவும் உதவியாக இருக்கும். இதனை அழகிற்காக எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

1. கொத்தமல்லி மற்றும் கற்றாழை அரைத்த கொத்தமல்லி இலையின் விழுதுடன் கற்றாழையை கலந்து முகத்திற்கு அப்ளை செய்வதால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைகிறது. உங்களுக்கு இளமை தோற்றம் கிடைக்கிறது.

2. கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை கொத்தமல்லி இலை சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து முகத்திற்கு பயன்படுத்துவதால், நீங்கள் நம்ப முடியாத மாற்றத்தை உணரலாம். முகத்தில் உள்ள முகப்பருக்கள், இறந்த செல்கள் எல்லாம் நீங்கி முகம் பொலிவடையும்.

3. பேஸ் பேக் கொத்தமல்லி இலையை அரைத்து அதில் பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்திற்கு பேஸ் பேக் போட்டால் முகம் ஒளி பெரும். பார்பவர்கள் வியக்கும் அளவுக்கு முகம் மாறும்.

4. பேஸ் பேக் 2 கொத்தமல்லி இலை, புழுங்கல் அரிசி சாதம், யோகார்ட் போன்றவற்றை நன்றாக அரைத்து முகத்திற்கு பேஸ் பேக் போட்டால் முகம் பளபளக்கும்.

5. ஓட்ஸ் கொத்தமல்லி இலை, சந்தனம், ஓட்ஸ் ஆகியவற்றை கொண்டு பேஸ் பேக் போடும் போது மிகச்சிறந்த பலன் கிடைக்கும்.

6. தசைகளுக்கு ஊட்டமளிக்கும் கொத்தமல்லி முகத்தில் உள்ள தசைகளுக்கு ஊட்டமளித்து முகத்தின் தோற்றத்தை மேம்படுத்தும். முகத்தை பிரஷ் ஆக காட்டும்.

7. முகப்பருக்கள் முகப்பருக்கள் அதிகமாக உள்ளவர்கள் இதனை தொடந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும், கிளியர் சருமத்தை பெற முடியும்.

8. உதடுகள் நிறம் பெற உதடுகள் நல்ல நிறம் பெற கொத்தமல்லி இலையின் சாறு உதவியாக இருக்கும். இது அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது. இது முகப்பருக்களை மட்டுமல்லாமல், அதன் தழும்புகளையும் போக்குகிறது. முக சுருக்கங்களை நீக்க உதவுகிறது.

Related posts

உங்க மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை மாயமாய் மறைய சூப்பர் டிப்ஸ்….

nathan

கருப்பாக இருப்பவர்களுக்கு வீட்டில் செய்யக்கூடிய இயற்கை பியூட்டி டிப்ஸ்

nathan

முகத்தில் உள்ள அழுக்கை நீக்கும் ஸ்கரப்

nathan

உங்களுக்கு தெரியுமா அரிப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம்?

nathan

உங்களுக்கு தெரியுமா சருமத்திற்கு அழகு தரும் மஞ்சள் தூள் பேஸ் பேக்

nathan

15 நிமிடத்தில் முகத்தில் வளரும் தேவையற்ற முடியை நீக்க வேண்டுமா?

nathan

வயதாவதால் கழுத்துப் பகுதியில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கும் வல்லமையும் அன்னாசிக்கு உண்டு.

nathan

உங்களுக்கு ஹார்மோன் மாற்றத்தால் ஏற்பட கூடிய பருக்களை மறைய செய்யணுமா..?அப்ப இத படிங்க

nathan

நெற்றியில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குவதற்கான 6 எளிய வழிகள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan