29.5 C
Chennai
Friday, May 23, 2025
1496390187 3262 1
ஊறுகாய் வகைகள்

மீன் ஊறுகாய் செய்ய தெரிந்து கொள்ள வேண்டுமா…?

தேவையான பொருட்கள்:

மீன் – 1/2 கிலோ (முள் அதிகம் இல்லாத மீன்)
மஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 3 அல்லது 4 மேஜைக்கரண்டி
வெந்தய பொடி – 1 மேஜைக்கரண்டி
பூண்டு – 1
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
வினிகர் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1 மேஜைக்கரண்டி
கறிவேப்பில்லை – சிறிது
நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். மீனை நன்றாக கழுவி ஈரத்தன்மை போனதும் அதன் மேல் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்திருக்கும் மீன் துண்டுகளை போட்டு பொன் நிறமாக வறுத்து தனியே வைக்கவும்.

மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு அதனுடன் மிளகாய் பொடி, வெந்தயபொடி, உப்பு சேர்த்து கிளறி அதனுடன் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

5 நிமிடம் ஆனதும் அரை கப் வினிகர் சேர்த்து 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். நன்கு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். சுவையான மீன் ஊறுகாய் தயார்.1496390187 3262

Related posts

கத்திரிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி

nathan

ஸ்டஃப்டு பச்சை மிளகாய் ஊறுகாய்!….

sangika

இஞ்சி-நெல்லிக்காய் ஊறுகாய் செய்ய….

nathan

வடுமா ஊறுகாய்

nathan

எலுமிச்சை ஊறுகாய்

nathan

சுவையான இஞ்சி புளி தொக்கு!

sangika

தக்காளி இனிப்பு பச்சடி

nathan

மாம்பழ பாப்டி

nathan

தக்காளி ஊறுகாய்

nathan