26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
201706301247187463 how to make salem mutton curry SECVPF
அசைவ வகைகள்

அருமையான சேலம் ஸ்டைல் மட்டன் குழம்பு

மட்டன் குழம்புகளில் நிறைய ஸ்டைல்கள் உள்ளன. ஒவ்வொரு ஸ்டைலும் ஒவ்வொரு ருசியைத் தரும். இன்று சேலம் ஸ்டைல் மட்டன் குழம்பு செய்முறையை பார்க்கலாம்.

அருமையான சேலம் ஸ்டைல் மட்டன் குழம்பு
தேவையான பொருட்கள்:

மட்டன் – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 1/2 கிலோ
தக்காளி – 1
மல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
பட்டை – 2
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
தேங்காய் – 1 மூடி (துருவியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 10
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
பிரியாணி இலை – 1
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

201706301247187463 how to make salem mutton curry SECVPF
செய்முறை:

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ளவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவி வைத்துள்ள மட்டன், மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, 7 விசில் விட்டு இறக்கி வைக்கவும்..

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய், சிறிது கறிவேப்பிலை, சீரகம் மற்றும் மிளகு சேர்த்து வறுத்து, தனியாக வைக்கவும்.

* அதே வாணலியில் உள்ள எஞ்சிய எண்ணெயில் பாதி வெங்காயத்தை போட்டு வதக்கி ஆற வைக்கவும்.

* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.

* பின் வதக்கிய அனைத்தையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு, நைஸாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு 3-5 நிமிடம் வதக்கிவிட வேண்டும்.

* வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் வேக வைத்துள்ள மட்டனை ஊற்றி, ஒரு கொதி விட வேண்டும்.

* குழம்பு நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அத்துடன் தேங்காய் கலவையை தவிர, அரைத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து, உப்பு போட்டு நன்கு 10 நிமிடம் கொதிக்க விடவும்.

* இறுதியில் நைஸாக அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கவும்.

* அருமையான சேலம் மட்டன் குழம்பு ரெடி!!!

Related posts

இறால் சில்லி 65

nathan

நாசிக்கோரி

nathan

கோங்குரா சிக்கன்

nathan

வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான தந்தூரி சிக்கன்

nathan

புதினா இறால் குழம்பு

nathan

ருசியான… சிக்கன் பக்கோடா

nathan

சுவையான யாழ்ப்பாண வாசம் வீசும் கணவாய் பிரட்டல்: செய்வது எப்படி?

nathan

சுவையான மொகல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி

nathan

மிளகு மீன் மசாலா

nathan