eyes 08 1486548434
கண்கள் பராமரிப்பு

கண்களை அழகா காண்பிக்கனுமா? இதோ அருமையான குறிப்புகள்

கண்கள்தான் நீங்கள் இளமையாக இருக்கிறீர்களா அல்லது வயதாகிவிட்டதா எனச் சொல்லும் முதல் உறுப்பு. முதுமை அடைய அடைய, கண்கள் குழிவிழுந்து, கருவளையம் மற்றும் தொய்வ்டையும். அதன் பின்தான்சுருக்கம் விழும்.

உங்கள் கண்கள் இளமையாக இருந்தாலே சுருக்கம் விழுவது தள்ளிப் போகும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? செய்வதற்கு மிக எளிமையாக குறிபுகள்தான்.

கண்கள் ஒற்றிக் கொள்ள:

தாமரை, ரோஜா, தாழம்பூ, நந்தியாவட்டை ஆகிய மலர்களில் ஒன்றை எடுத்து அடிக்கடி கண்களில் ஒற்றிக் கொண்டால் கண்கள் இள்மையாய் அழகுடன் காட்சியளிக்கும்.

கருவளையம் மறைய :
சோற்று கற்றாழை ஜெல்லுடன் வெள்ளரிக்காயை சேர்த்து நன்றாக அரைத்து கண்களை சுற்றி இருக்கும் கருவளையத்தின் மீது தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் கருவளையம் குறையும்.

கண்கள் அழகு பெற : ஆப்பிள் பழத்தை நறுக்கி, சுத்தமான தேனில் நனைத்துச் சாப்பிட வேண்டும்.சில கண்கள் அழகு பெறுவதோடு சிறந்த பிரகாசத்தையும் பெறும்.

ஆரோக்கியமான கண்மை தயாரிக்க :
கரிசலாங்கண்ணிச் சாற்றை பிழிந்து மெல்லிய துணியில் நனைத்து நிழலில் உலர்த்தவும். இப்படிப் பல் முறை நனைத்து காய்ந்த துணியை திரியாகத் திரித்துக் கொள்ளவேண்டும். ஒரு விளக்கில் பசு நெய்யை அல்லது விளக்கெண்ணையை ஊற்றி விளக்கேற்ற வேண்டும். திரியில் ஏற்படும் புகையை ஒரு மண் சட்டியில் அல்லது செம்பு பாத்திரத்தில் படும்படி வைக்க வேண்டும்.

கண்மை தயாரிக்கும் முறை
திரி தீர்ந்ததும், பாத்திரத்தில் படிந்த கரியை எடுத்து, அதனை நெய்யில் அல்லது விளக்கெண்ணெயில் குழைத்துக் கொள்ள வேண்டும். இப்படிதான் கண்மை செய்ய வேண்டும். இது கண்களை பாதுகாப்பதோடு இளமையாகவும் வைத்திருக்கும்.

eyes 08 1486548434

Related posts

கண் கருவளையங்களுக்கான சிறந்த‌ 11 அழகு குறிப்புகள்

nathan

முக வடிவத்திற்கு ஏற்ற புருவம்:

nathan

கருவளையம் மறைய…

nathan

கருவளையத்தை போக்கும் உருளைக்கிழங்கு

nathan

பிரமாதமான‌ கண்களை பெற‌ 5 சூப்பர் அழகுக் குறிப்புகள் … அதுவும் ஒப்பனை எதுவும் இல்லாமல்!

nathan

கண்ணை சுற்றிய கருவளையமே ஓடிப்போ!

nathan

வசீகரிக்கும் கண்களுக்கு

nathan

கண்களுக்க்கான க்ரீமை சரியான வழியில் உபயோகிப்பது எப்படி?

nathan

கருவளையத்தை நிரந்தரமாக நீக்க எளிய வழி- how to clear dark cycle?

nathan