25.5 C
Chennai
Tuesday, Jan 27, 2026
201706161529170076 chapati sidedish onion tomato thokku SECVPF
​பொதுவானவை

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் தக்காளி – சின்ன வெங்காய தொக்கு

சப்பாத்தி, பூரி, நாண், தோசைக்கு தொட்டு கொள்ள சூப்பரான சைடிஷ் இந்த தக்காளி – சின்ன வெங்காய தொக்கு. இந்த தொக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் தக்காளி – சின்ன வெங்காய தொக்கு
தேவையான பொருட்கள் :

பழுத்த தக்காளி – அரை கிலோ,
சின்ன வெங்காயம் – 150 கிராம்,
மிளகாய்தூள் – ஒன்றரை டீஸ்பூன்,
தனியாதூள் – ஒரு டீஸ்பூன்,
பூண்டு – 8 பல்,
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – தேவையான அளவு.

தாளிக்க :

கடுகு – அரை டீஸ்பூன்,
சோம்பு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – கால் கப்.

செய்முறை :

* தக்காளியை அரைத்து சாறு எடுத்து கொள்ளவும்.

* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து தனியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு தாளித்த பின் பூண்டு சேர்த்து நன்றாகப் பொரிந்ததும் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.

* வெங்காய விழுதை மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.

* அடுத்து அதில் தக்காளி சாறை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதனுடன் உப்பு, மிளகாய்தூள், தனியாதூள், கறிவேப்பிலை சேர்த்து தொக்கு நன்றாக சுருங்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான தக்காளி – சின்ன வெங்காய தொக்கு ரெடி.

* சப்பாத்திக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ்! 201706161529170076 chapati sidedish onion tomato thokku SECVPF

Related posts

குழந்தை பாலியல் கொடுமையைத் தடுக்க பள்ளிகள் என்ன செய்யலாம்

nathan

கோபமாக இருக்கும் கணவரை சமாதானப்படுத்துவதற்கான வழிகள்

nathan

மட்டன் ரசம்

nathan

சூப்பரான நெய்யப்பம் செய்வது எப்படி?

nathan

சத்தான சுவையான ஸ்நாக்ஸ் கேழ்வரகு சுண்டல்

nathan

ஸ்வீட் கார்ன் புலாவ்

nathan

முட்டை நூடுல்ஸ் / Egg Noodles tamil

nathan

சுவையான காஞ்சிபுரம் இட்லி

nathan

செட்டிநாடு குழம்பு மிளகாய் பொடி

nathan