35.1 C
Chennai
Monday, Jun 17, 2024
01 1485934604 1barley
முகப் பராமரிப்பு

குண்டு கன்னங்கள் உங்களை பருமனா காண்பிக்குதா? உங்களுக்கு சில டிப்ஸ்!!

பூசிய கன்னங்கள் அழகுதான். அதே சமயம் மிக குண்டாக இருக்கும் கன்னங்களால பல மைனஸ் இருக்கின்றன. எளிதில் தொய்வடையும். உடல் எடை குறைக்கும்போது முகச் சதை தொங்கி வயதான தோற்றம் தரும். உடல் குண்டாகவும் காண்பிக்கும்.

உங்கள் கன்னம் குறையவும் அதே சம்யம் பொலிவு குறையாமல் இருக்கவும் இங்குள்ள குறிப்புகளை பயனப்டுத்திப் பாருங்கள்

பார்லி மற்றும் கேரட் சாறு :
தேவையானவை :

பார்லி பவுடர்- 1 ஸ்பூன்
கேரட் சாறு – தேவையான அளவு
முல்தானி மட்டி – அரை ஸ்பூன்.

பார்லி மற்றும் கேரட் சாறு : பார்லி பவுடருடன் முல்தானி மட்டி கலந்து பேஸ்ட் போலச் செய்யும் அளவிற்கு கேரட் சாறு கலந்து முகத்தில் பேக் போடவும். காய்ந்து இறுகும்போது கழுவுங்கள். இவ்வாறு செய்தால் கன்னத்தில் அளவு குறையும். தேவையில்லாத சதை குறைந்து அழகாய் காண்பிக்கும்.

வெள்ளரி விதை : வெள்ளரி விதையை பொடி செய்து அதனுடன் சர்க்கரை மற்றும் மஞ்சள் கலந்து இவற்றுடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் போடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்யும்போது கன்னச் சதை குறையும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் வெட்டிவேர்: தேங்காய் எண்ணெயை காய்ச்சி அதில் கஸ்தூரி மஞ்சள் பொடி மற்றும் சிறு துண்டுகளாக வெட்டிய 10 வெட்டி வேர் போட்டு மூடி வைத்திடுங்கள். இந்த எண்ணெயை தினமும் கன்னத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளித்தால் நல்ல பலன் தரும்.

முள்ளங்கி: சிலருக்கு தலையில் நீர் கோர்த்துக் கொண்டால் முகம் பெரிதாக காண்பிக்கும். இதனால் வாழைத்தண்டு, முள்ளங்கி மற்றும் கருவேப்பிலை ஜூஸ் குடித்தால் நீர் குறையும்.

01 1485934604 1barley

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வசீகரிக்கும் வெள்ளை அழகு வேண்டுமா?

nathan

முகத்தில் சொரசொரவென்று அசிங்கமாக இருக்கும் கரும்புள்ளிகளைப் போக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

nathan

அவசியம் படிக்க..முகப்பருவிற்கு போடும் கிரீம் வயிற்றில் உள்ள சிசுவின் இதயத்தை பாதிக்குமா?

nathan

உங்கள் முகம் அழுக்காக உள்ளதா? இதோ வோட்கா பேஷியல்

nathan

கண்களை சுற்றி இருக்கும் சுருக்கங்களை போக்கனுமா?பலன் தரும் கைவைத்தியங்கள் முயன்று பாருங்கள்!!

nathan

உங்க முகத்தில் மேடு பள்ளங்கள் அதிகமாக உள்ளதா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

சரும கருமையைப் போக்க வேண்டுமா? அப்ப சோள மாவு ஃபேஸ் பேக் போடுங்க…

nathan

ஜப்பானியர்கள் இவ்வளவு மொழு மொழுனு இருக்க என்ன காரணம்னு தெரியுமா…? எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

nathan

என்றும் இளமையுடன் வாழ என்ன செய்யலாம்?..!! இளம் வயதில் முதுமை?..

nathan