25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
1496130787 6054
​பொதுவானவை

கருவாடு ரசம் செய்திருக்கிறீர்களா?… இல்லைன்னா இதை படியுங்க…

தேவையான பொருட்கள்:

கருவாடு – 4 துண்டுகள்
தனியா – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 10 பல்
வெந்தயம் – 1/2 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 3
காய்ந்த மிளகாய் – 4
தக்காளி – 2 பெரியது
கொத்தமல்லி – 1 கைப்பிடி
கறிவேப்பிலை – 2 கீற்று
எண்ணெய் – தேவையான அளவு
சோம்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு

செய்முறை:

மிக்ஸியில் இஞ்சி, பச்சை மிளகாய், தனியா, சீரகம், மிளகு, சோம்பு ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் தக்காளி, கொத்தமல்லி, பூண்டு சேர்த்து லேசாக அரைத்துக்கொள்ளவும். தண்ணீரில் அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு போட்டு கலக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணய் ஊற்றி கருவாட்டை சற்று வறுத்து அந்த சட்டியிலேயே ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு மீதமுள்ள எண்ணெயில் காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி, கரைத்து வைத்த ரசத்தை ஊற்றவும். கொஞ்ச நேரம் கொதிக்கவிட்டு கொத்தமல்லியை தூவி இறக்கவும்.1496130787 6054

Related posts

ஆக்கப்பூர்வமானதாக மாற்றுங்கள்

nathan

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால் என்ன பலன்கள் கிடைக்கும்?

nathan

சுவையான மாங்காய் ரசம்

nathan

மட்டன் கீமா நோன்பு கஞ்சி : செய்முறைகளுடன்…!

nathan

சத்தான சுவையான உளுந்து கஞ்சி

nathan

காதல் திருமணத்தை பெற்றோர் எதிர்க்க காரணம்

nathan

சத்தான கருப்பு உளுந்து சாமை கஞ்சி

nathan

சத்து நிறைந்த பச்சை பயறு சுண்டல்

nathan

கண்டதிப்பிலி ரசம்

nathan