கருப்பு மிக அழகு. அதோடு ஆராய்ச்சியில் கருப்பு நிறமனவர்களுக்குதான் சரும நோய்கள் வராது என கூறுகின்றனர். இயற்கையான கருப்பு நிறம் அழகு. ஆனால் வெயிலினால் கருமை படிந்தவர்கள் தாங்கள் இழந்த நிறத்தை மீண்டும் பெறுவதுதான் ஆரோக்கியம்.
சிவப்பென்பது ஒரேடியாய் க்ரீம் அல்லது குறிப்புகளை பயன்படுத்துவதால் வராது. ஆனாலுல் எல்லாருக்கும் சிறிதாவது நாம் சிவப்பாக மாட்டோமா என்ற நினைப்பு தோன்றும். அவ்வாறு இருப்பவர்கள் இந்த குறிப்பை முயற்சித்துப் பாருங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையானவை : கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1, உலர்ந்த திராட்சை பழம்-10,
செய்முறை : பேரிச்சை மற்றும் உலர் திராட்சையை ஒரு நாள் முழுவதும் வெந்நீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி யை மசித்து கலந்து கொள்ளுங்கள். பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள்.
20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.