35.6 C
Chennai
Tuesday, Jul 29, 2025
20 1484890596 7 shampoo
தலைமுடி சிகிச்சை

தலைமுடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியை தூண்ட வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

இதுவரை தலைமுடி உதிர்வதைத் தடுக்க உதவும் ஏராளமான வழிகளைப் பற்றி படித்திருப்பீர்கள் மற்றும் முயற்சியும் செய்திருப்பீர்கள். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹேர் பேக் தலைமுடி உதிர்வதைத் தடுத்து, தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும். குறிப்பாக இந்த ஹேர் பேக் செய்வதற்கு நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களே போதும்.

சரி, இப்போது தலைமுடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்ட உதவும் ஹேர் பேக் குறித்து காண்போம். அதைப் படித்து முயற்சித்து நன்மைப் பெறுங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தேவையான பொருட்கள்: 1. வாழைப்பழம் – 2

2. முட்டை மஞ்சள் கரு – 1

3. எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

செய்முறை: முதலில் வாழைப்பழத்தை கையால் நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை #1 தயாரித்து வைத்துள்ள ஹேர் பேக்கை, ஸ்கால்ப் மற்றும் தலைமுடியின் முனை வரை நன்கு தடவிக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை #2 பின்பு பிளாஸ்டிக் கவர் அல்லது ஷவர் கேப் கொண்டு தலையை நன்கு சுற்றி, 40 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை #3 இறுதியில் தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை நன்கு அலச வேண்டும்.

குறிப்பு இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வந்தால், தலைமுடி உதிர்வது படிப்படியாக குறைந்து, அதன் வளர்ச்சியில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

20 1484890596 7 shampoo

Related posts

உங்களுக்கு தெரியுமா முடி உதிர்வு, பொடுகு, அடர்த்தியின்மை இதுக்கெல்லாம் சிறந்த தீர்வு தரும் ஒரு பொருள் !!

nathan

சும்மா பளபளக்கும்… வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா?

nathan

தழையத் தழைய கூந்தலுடன் வளைய வரும் பெண்களை பார்க்கும் போது, பொறாமையாக இருக்கிறதா?

nathan

தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க சில எளிய வழிகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா வீட்டிலேயே தயாரிக்கலாம் “நேச்சுரல் ஹேர் டை”

nathan

முடி உதிர்தல் பற்றிய கவலைகளை போக்கும் அற்புத எண்ணெய்கள்!

nathan

உங்க முடி கருகருவென வளர சூப்பர் டிப்ஸ்!

nathan

ஏன் வெயிட் பண்றீங்க… கேரட் எண்ணெய் தயாரித்து தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…

nathan

காய்கறி ஹேர் டை பயன்படுத்தினால் இவ்வளவு பலன்களா..?!

nathan