அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

எண்ணெய் வழியும் சருமமா?

Oily-Face-jpg-1107-300x168இயற்கையின் படைப்பில் அனைத்துமே அழகுதான். அழகை சீராக பராமரிப்பதன் மூலம்தான் ஆரோக்கியமான அழகை பெறமுடியும்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

உடலின் உள்ளே நோயின் தாக்கம் இருந்தால் அதன் வெளிப்பாடு முகம் மற்றும் சருமப் பகுதிகளில் தெரியவரும். இன்றைய நாகரீக உலகில் காற்றும், நீரும் மாசடைந்துள்ளன. மேலும் வாகன புகைகளின் காரணமாக உடல் அலர்ஜி உண்டாகி சருமப் பாதிப்பு உண்டாகிறது.
எண்ணெய் வழியும் சருமத்திற்கு சிலருக்கு எவ்வளவுதான் சோப்பு போட்டு முகம் கழுவினாலும் முகத்தில் எண்ணெய் பசை மாறாது. மேலும் மேக்கப் செய்த சிறிது நேரத்தில் முகத்தில் எண்ணெய் வழியும். கெமிக்கல் கலந்த முகப் பூச்சுகளால் அலர்ஜி உண்டாகுமே தவிர முழுமையான பலன் கிடைக்காது.

இவர்கள் கடைந்த மோரை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி சிறிது நேரம் அதாவது 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம்சூடான நீரில் கழுவி வந்தால் எண்ணெய் வழியும் சருமம் மாறும்.
மேலும் தினமும் உணவில் கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். அதுபோல் வாயுவை அதிகரிக்கக் கூடிய உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக கெமிக்கல் அல்லாத மூலிகை சோப்புகளை பயன்படுத்துவது நல்லது.

Related posts

ஆண்களே உங்களுக்குதான் இந்த விஷயம்! நீங்க ‘ஹேண்ட்சம் பாய்’ போன்று மாற அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!

nathan

முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காண

nathan

சரும கருமையை நீக்க வீட்டிலேயே எலுமிச்சை ஃபேஷியல் செய்வது எப்படி?

nathan

பக்கவிளைவுகள் இல்லாத. இயற்கை ஃபேஷியல்கள்.

nathan

நீங்கள் கருப்பாக இருக்கிறீர்களா? கவலை வேண்டாம்

nathan

இத படிங்க உங்கள் சருமம் மற்றும் தலை முடியில் இந்த பழங்களை பயன்படுத்தலாமா?

nathan

சரும வறட்சிக்கு இயற்கையோடு கூடிய நிவாரணம் ……

sangika

இதை நீங்களே பாருங்க.! துபாயில் பொது இடத்தில் நிர்வாண போஸ் கொடுத்த பிரச்சினையில் சிக்கிய இளம்பெண்

nathan

பிரபல சீரியல் நடிகர் தற்கொலை!

nathan