28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
10 1484030733 6 aloe
முகப்பரு

2 நாட்களில் முகப்பரு, கரும்புள்ளி, சரும கருமை போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும் ஃபேஸ் பேக்குகள்!

தற்போது சரும பிரச்சனைகளான முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் வெயிலால் கருமையான சருமத்தால் பலரும் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். இப்பிரச்சனைகளைப் போக்க க்ரீம்கள் பலவற்றை வாங்கி பயன்படுத்தியும் இருப்பார்கள். இருந்தாலும், எந்த ஒரு மாற்றமும் தெரிந்திருக்காது. சரும பிரச்சனைகளுக்கு இயற்கை வழிகளை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை பல்வேறு சரும பிரச்சனைகளைப் போக்கும் சில எளிய ஃபேஸ் பேக்குகளைக் கொடுத்துள்ளது. அவற்றை தினமும் சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், நிச்சயம் சருமத்தில் உள்ள முகப்பரு, கரும்புள்ளி பிரச்சனைகளை விரைவில் போக்கலாம்.

வெள்ளரிக்காய் பேக் வெள்ளரிக்காயை அரைத்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் வெள்ளரிக்காயில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், சருமத்தில் இருக்கும் கருமைகள் மறைய ஆரம்பித்து, சரும பொலிவு அதிகரிக்கும்.

தேன் மற்றும் எலுமிச்சை பேக் வெயிலில் சுற்றி கருமையான சருமத்தை மீண்டும் பிரகாசமாக்க, எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் மென்மையாக இருக்கும்.

பால் மற்றும் சந்தனம் பேக் பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது கருமையான தழும்புகள் மற்றும் சரும கருமையைப் போக்கும். சந்தனமோ சருமத்தின் பொலிவை அதிகரிக்கும். இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் பேக் முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர்ந்ததும் கழுவ வேண்டும். இதனால் முகப்பரு முதல் கரும்புள்ளிகள் வரை அனைத்தும் நீங்கும்.

தக்காளி மற்றும் தயிர் பேக் தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 15-20 நிமிடம் கழித்து கழுவ, சருமத்தில் உள்ள தழும்புகள் மறைந்து, சருமம் பிரகாசமாக மின்னும்.

கற்றாழை மற்றும் லாவெண்டர் பேக் கற்றாழை ஜெல்லில் சிறிது லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சரும கருமை, தழும்புகள் போன்றவை மறைய ஆரம்பிக்கும்.

10 1484030733 6 aloe

Related posts

அழகைக் கெடுக்கும் முகப்பரு, தவிர்க்க சிம்பிள் டிப்ஸ்!

nathan

முகப்பருக்களை போக்கும் பீட்ரூட் ஃபேஸ் பேக்

nathan

முகப் பரு – கரும் புள்ளி -தழும்புகள் நீங்க

nathan

முகத்திலுள்ள தழும்புகளை நீக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்.

nathan

இந்த உணவுப் பொருட்கள் முகப்பருக்களை உண்டாக்கும் என்பது தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பருக்கள் பற்றிய பயம் இனி தேவையில்லை!..

nathan

முகப்பரு தழும்புகள் நீக்கும் முறைகள் -தெரிந்துகொள்வோமா?

nathan

முகப்பரு வடு நீக்க வெந்தயம் பெஸ்ட் :

nathan

பருக்கள், தழும்புகளை போக்கும் ஹெர்பல் பேக்

nathan