29.7 C
Chennai
Saturday, Jul 11, 2026
சரும பராமரிப்பு

சருமத்தில் உள்ள நீங்கா கருமையை எளிதில் போக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

அழகு என்று வரும் போது பலரும் தங்கள் முகத்திற்கு மட்டும் தான் அதிக பராமரிப்புக்களைக் கொடுத்து வருவார்கள். ஆனால் அழகு என்பது தலை முதல் கால் வரை என்பதை மறவாதீர்கள். அதிலும் பலருக்கும் நடிகர், நடிகைகளைப் போன்று வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.

அதற்காக பல க்ரீம்களை வாங்கியும் பயன்படுத்துவோம். இதனால் சருமத்தின் நிறமும் தற்காலிகமாக அதிகரித்து காணப்படும். இப்படி கண்டதை சருமத்திற்கு பயன்படுத்தினால், சரும ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். ஆனால் சருமத்தில் உள்ள நீங்கா கருமையைப் போக்க இயற்கை வழிகளைப் பின்பற்றினால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சரும செல்களும் ஆரோக்கியமாக இருக்கும்.

இங்கு சருமத்தில் உள்ள நீங்கா கருமையைப் போக்க உதவும் ஓர் அற்புதமான பாடி ஸ்கரப் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி, வெள்ளையாக மாறுங்கள்.

தேவையான பொருட்கள்: 1. ஆரஞ்சு பழம் – 2 துண்டுகள்

2. எலுமிச்சை பழம் – 2 துண்டுகள்

3. கல் உப்பு – 1/2 கப்

4. ஆலிவ் ஆயில் – 1/2 கப்

செய்முறை:
மிக்ஸியில் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு துண்டுகளைப் போட்டு, அத்துடன் கல் உப்பு மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது பாடி ஸ்கரப் ரெடி!

பயன்படுத்தும் முறை #1 குளியலறைக்கு சென்று உடல் முழுவதும் இந்த கலவையைத் தடவி, வட்ட சுழற்சியில் 5 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும்.

பயன்படுத்தும் முறை #2 பின் சோப்பு பயன்படுத்தி, நீரால் உடலை நன்கு கழுவி, உலர்த்த வேண்டும்.

நன்மை
இப்படி உடல் முழுவதும் ஸ்கரப் செய்யும் போது, அதில் உள்ள உட்பொருட்களின் சக்தியால் சருமத்தில் உள்ள கருமைகள் முழுமையாக நீங்கி, சருமம் வெள்ளையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! உங்கள் சரும ஆரோக்கியத்தை சீரமைக்க சிறந்த 5 எண்ணெய்கள்..!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தழும்பை போக்க விட்டமின் ஈ யை எப்படி பயன்படுத்தலாம்?

nathan

அழகாக இருக்க எளிய வழி,

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நயன்தாரா மாதிரி பொலிவான சருமத்தை பெற நீங்க இத செஞ்சா போதுமாம்…

nathan

ஜில்லுன்னு ஒரு ஐஸ் தெரப்பி!

nathan

சோடா உப்பினைக் கொண்டு அழகுக் குறிப்புகள் சில!

nathan

குளிர் சருமம் குளி!

nathan

குழந்தைகளுக்கான குளியல் பொடிகளை தயாரித்து பயன்படுத்துங்கள்..

nathan

இளமையுடனும், அழகுடனும் இருக்க வேண்டும் எனில் நெல்லிகாய் சாப்பிடுங்க…

nathan