ehknlL3
சைவம்

கடலைக் கறி

என்னென்ன தேவை?

கறுப்பு கொண்டைக்கடலை – 250 கிராம்,
தேங்காய் எண்ணெய்- 3 மேசைக்கரண்டி,
வெங்காயம் – 1, உப்பு-தேவைக்கு,
கறிவேப்பிலை – சிறிதளவு,
மிளகாய்த் தூள் – 1 1/2 மேசைக்கரண்டி,
மஞ்சள் தூள் – 1/4 மேசைக்கரண்டி,
கொத்தமல்லித் தூள் – 2 மேசைக்கரண்டி,
காய்ந்த மிளகாய் – 3,
துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி.


எப்படிச் செய்வது?

கொண்டைக் கடலையை இரவே ஊறவைத்து, மறுநாள் குக்கரில் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். வேகவைத்துள்ள கடலையில் இரண்டு மேசைக்கரண்டி அளவு மட்டும் எடுத்து அதனை தேங்காய்த்துருவலுடன் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை வேகவைத்துள்ள கடலையுடன் சேர்க்கவும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் கறிவேப்பிலை, கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளி்க்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, அதில் மஞ்சள் தூள், கொத்தமல்லித்தூள், மிளகாய்த் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். பிறகு இதில் வேகவைத்துள்ள கடலையும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இது புட்டு, இடியாப்பம், ஆப்பம், தோசை, சப்பாத்திக்கு சுவையாக இருக்கும்.ehknlL3

Related posts

சூப்பரான உருளைக்கிழங்கு மிளகு வறுவல்

nathan

பச்சை சுண்டைக்காய் குழம்பு

nathan

சூப்பரான வெண்டைக்காய் ஸ்டஃப்டு வறுவல்

nathan

பொங்கல் அன்று செய்யப்படும் மஞ்சள் பூசணி மொச்சை பொரியல்

nathan

சுவையான கடலைப்பருப்பு தேங்காய் குழம்பு

nathan

ஓம மோர்க் குழம்பு

nathan

சம்பா கோதுமை புலாவ்

nathan

கடாய் பனீர் – kadai paneer

nathan

சூப்பரான மாங்காய் புலாவ் செய்யலாம் வாங்க…

nathan