தேவையான பொருட்கள்:
கற்கண்டு – 150 கிராம்
பச்சரிசி – 100 கிராம்
பாசிபருப்பு – 200 கிராம்
சக்கரை – 200 கிராம்
பால் – 200 மி.லி
பச்சைக் கற்பூரம் – சிறிதளவு
ஏலக்காய் பொடி – சிறிதளவு
முந்திரி – 25 கிராம்
உலர்ந்த திராட்சை – 5 கிராம்
நெய் – தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசி, பாசி பருப்பை பாத்திரத்தில் போட்டு லேசான சூடு வரும்வரை வறுத்து எடுக்கவும். அதை கழுவி குக்கரில் போட்டு பாலுடன் 2 கப் தண்னீர் விட்டு அதில் சர்க்கரையை சேர்த்து 4 விசில் வரும் வரை வேகவைக்கவும். பாத்திரத்தில் 1/2 டம்ளர் தண்ணீர்விட்டு அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு கரைந்து கொதி வந்ததும் கற்கண்டை சேர்க்கவும்.
உடனே குக்கரில் உள்ள அரிசி, பருப்பு கலவையைக் கொட்டி, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்து அடி பிடிக்காமல் கிளறுங்கள். முதலில் இறுகி, பிறகு இளகும். நெய்யில் வறுத்த முந்திரி, மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்குங்கள். சுவையான கற்கண்டு பொங்கல் தயார்.