25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
அழகு குறிப்புகள்கண்கள் பராமரிப்பு

நல்ல அடர்த்தியான கண் இமைகள் வேண்டுமா,tamil beauty tips for face

iStock_000015536474Medium

உங்கள் முகத்திலேயே அழகான பகுதி எதுவென்றால் கண்கள் என்று தான் அனைவரும் கூறுவோம். அதுவும் தடியான கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களுடன் பெரிய கண்களாக இருந்தால் அழகு மேன்மேலும் அதிகரிக்கும். அதனால் தான் கண்களுக்கான மேக்-அப் எப்போதும் புகழோடு திகழ்கிறது. அதன் மதிப்பையும் இழக்காமல் இருக்கிறது. புகழ் பெற்ற சினிமா நட்சத்திரங்கள் முதல் சாதரான கல்லூரி மாணவி வரை தங்களின் கண்களை அழகாக வெளிக்காட்டவே ஆசைப்படுகின்றனர். அழகான கண்களை பெறுவதற்கு கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களின் மீது கவனம் செலுத்த வேண்டும். இவையிரண்டும் கண்களுக்கான மேக்-அப்பில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

தடிமனாகவும் கருமையாகவும் இருந்தால் கண் இமை ரோமங்கள் அழகாக காட்சியளிக்கும். பெண்கள் தங்களின் கண் இமை ரோமங்களை தடிமனாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள சில அழகு டிப்ஸ்கள் இருக்கிறது. அழகு சாதனங்களை கொண்டு உங்கள் கண் இமை ரோமங்களை தடிமனாக மாற்றலாம். அதே போல் அதற்கு சில இயற்கையான வழி முறைகளும் இருக்கத் தான் செய்கிறது. கண் இமை ரோமங்களை தடிமனாக மாற்றுவதற்கு பல அழு டிப்ஸ்கள் இருக்கிறது. ஆனால் அவற்றில் சில சிறப்பாக செயல்படுவதில்லை.மேலும் அது உங்கள் சருமத்திற்கும் கூந்தல் வகைக்கும் ஒத்துப் போவதில்லை

. ஆனால் அவற்றில் சிறப்பாக செயல்படும் டிப்ஸ்களை பின்பற்றினால் அழகான தடியான கண் இமை ரோமங்களை பெறலாம். அப்படிப்பட்ட சில டிப்ஸ்களை இப்போது பார்க்கலாமா? மஸ்காரா பயன்படுத்துங்கள் வெளியே டேட்டிங் அல்லது ஏதாவது பார்ட்டிக்கு செல்வதால் உடனடியாக தடிமனான கண் இமை ரோமங்களை பெற வேண்டுமா? அப்படியானால் நல்ல மஸ்காராவை பயன்படுத்த வேண்டும். பெண்கள் தங்களின் கண் இமை ரோமங்களை தடியாக காட்ட பயன்படுத்தும் அழகு டிப்ஸ்களில் ஒன்றாக விளங்குகிறது மஸ்காரா. திறம்பட செயலாற்றும் இது புகழ்பெற்ற வழிமுறையாக விளங்குகிறது. நீளமான மற்றும் குட்டையான கண் இமை ரோமங்கள் என இரண்டு வகைகளுக்கும் பல வகையான மஸ்காராக்கள் கிடைக்கிறது. மேலும் அது பல வண்ணத்திலும் கிடைக்கிறது. ஆகவே கண் இமை ரோமங்களை உடனடியாக தடிமனாக்கி,

அது நீண்ட நேரம் நிலைத்து நிற்க மஸ்காராவை பயன்படுத்துங்கள். செயற்கை இமை ரோமங்கள் நீளமான தடிமனான கண் இமை ரோமங்களின் மீது ஆவலாக உள்ளதா? அப்படியானால் கண்களுக்கு கொஞ்சம் நீட்சியை பயன்படுத்தலாம்; அது தான் செயற்கை இமை ரோமங்கள். இவைகள் பார்ப்பதற்கு செயற்கையானது தான் என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். ஆனால் நீண்ட தடிமனான கண் இமை ரோமங்களின் மீது அதீத காதல் கொண்டிருந்தால் இதனை நீங்கள் பயன்படுத்தலாம். கண் இமை ரோமங்களை உடனடியாக தடியாக்க இதுவும் சிறந்த வழியாக விளங்குகிறது. இந்த செயற்கை இமை ரோமங்கள் அனைத்து அழகு சாதன கடைகளில் கிடைக்கும். மேலும் பல வகைகளிலும் கிடைக்கும். பெண்கள் பரவலாக பயன்படுத்தும் முறை இது. மாய்ஸ்சுரைஸ் கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களை ஈரப்பதத்துடன் வைக்க வாஸ்லின் பயன்படுத்துங்கள். இதனால் அவைகள் இயற்கையாகவே தடிமனாகவும்

கருமையாகவும் காட்சி அளிக்கும். ஆனால் மேக் அப் செய்து கண் இமை ரோமங்களை தடிமனாக்குவதை விட, இது அதிக காலம் எடுக்கும். ஆனால் இது நிரந்தர தீர்வாக அமைந்து, உங்கள் கண் இமை ரோமங்களை தடியாக்கும். எண்ணெய்கள் ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற பல எண்ணெய்களை பயன்படுத்தி கண் இமை ரோமன்களுக்கு மசாஜ் செய்து கொள்ளலாம். இந்த எண்ணெய்கள் உங்கள் கண் இமை ரோமங்களில் உள்ள மயிரடி நரம்பிழைகளை தூண்டி விடும் இந்த எண்ணெய்கள். அதனால் அதன் வளர்ச்சி மேம்படும். அதே போல் இந்த எண்ணெய்களை கொண்டு உங்கள் கண் இமைகளையும் சீரான முறையில் மசாஜ் செய்ய வேண்டும். உங்கள் கண் இமை ரோமங்களின் வேராக விளங்குவது உங்கள் கண் இமைகளே. அதனால் கண் இமை ரோமங்களின் வளர்ச்சி தானாகவே மேம்படும். கண் இமை ரோமங்களை தடியாக்க இதுவும் ஒரு இயற்கையான வழிமுறையாகும். இந்த வழிமுறை செயல்பட நீண்ட காலமாகும். அதனால் உங்களுக்கு பொறுமை தேவைப்படும். ஆனால் அழகு சாதனங்கள் இல்லாமல் இயற்கையாகவே தீர்வு கிடைக்கும் போது காத்திருப்பதில் ஒன்றும் தவறில்லையே. அழுத்துவதை (கசக்குவதை) நிறுத்துங்கள் நம் அனைவருக்கும் கண் இமைகளை கசக்கும் பழக்கம் இருக்குமல்லவா? அப்படி செய்யும் போது உங்கள் கண் இமை ரோமங்கள் உடைந்து உதிரவும் செய்யும். இது கண் இமை ரோமங்களின் தடிமானத்தை குறைத்து விடும்

அதனால் எப்போதும் இருப்பதை விட இன்னமும் மெலிதாக போய் விடும். இதனை தவிர்க்க கண் இமைகளை அடிக்கடி கசக்காதீர்கள். தடியான கண் இமை ரோமங்களை பெறுவதற்கு நீங்கள் செய்ய கூடாத அழகு டிப்ஸ்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. தடிமனான அழகிய கண் இமை ரோமங்களை பெறுவதற்கு மேற்கூறியவைகள் தான் சில முக்கிய டிப்ஸ். இந்த அழகு டிப்ஸ் அனைத்தும் பெண்களுக்கு உபயோகமாக இருக்கும். கண்களுக்கான மேக் அப் மற்றும் கண்களின் அழகு என்பது நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெற்றுக் கொண்டே தான் வருகிறது. தடியான கண் இமை ரோமங்கள் உங்களின் ஒட்டு மொத்த தோற்றத்தையே மாற்றி விடும். மேலும் உங்கள் கண்களையும் முகத்தையும் ஜொலிக்க வைக்கும்

Related posts

ஆண்களின் இந்த வகை ஹேர்ஸ்டைல் பெண்களுக்கு பிடிக்காதாம்

sangika

இதோ அற்புதமான அழகு, மணம் தரும்… குணமும் தரும்! lavender essential oil benefits for skin

nathan

ஆண்களின் முகத்தை தங்கம் போல மின்ன வைக்க!…

sangika

இரவு க்ரீமை தேர்வு செய்வது எப்படி?

nathan

முகத்தை பளபளவென மாற்ற இவற்றை தினமும் காலையில் செய்யுங்கள்!…

sangika

காய்ச்சலை தவிர்ப்பதற்கான 10 வீட்டு சிகிச்சைகள்!!! சூப்பரா பலன் தரும்!!

nathan

கண்களுக்கு கீழே கருவளையமா?

nathan

மரண மாஸாக வெளியானது ஜிகர்தாண்டா 2 டீசர்.!

nathan

அழகு சிகிச்சைகள் – முக அழகிற்கு குங்குமப்பூ

nathan