33.3 C
Chennai
Saturday, Jul 26, 2025
7tVRVXY
கேக் செய்முறை

வெனிலா சுவிஸ் ரோல்

என்னென்ன தேவை?

மைதா – 75 கிராம்,
பொடித்த சர்க்கரை – 100 கிராம்,
பெரிய சைஸ் முட்டை – 3,
எண்ணெய் – 50 மி.லி.,
ஆரஞ்சு எசென்ஸ் – 1 டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்,
ஜாம் – 4 டீஸ்பூன்,
பட்டர் பேப்பர் – 1/4 ஷீட்.

எப்படிச் செய்வது?

முட்டையின் மஞ்சள் கரு, வெள்ளை கருவை தனியாக பிரிக்கவும். வெள்ளை கருவை எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்கவும். இத்துடன் சர்க்கரையை கலக்கவும். பிறகு மஞ்சள் கருவை ஒவ்வொன்றாக சேர்த்து கலந்து, எண்ணெய், எசென்ஸ் ஊற்றி நன்கு அடிக்கவும். பின் ஹான்ட் பீட்டர் கொண்டு மைதா, பேக்கிங் பவுடர் சேர்த்து, கட்டியில்லாமல் கலந்து, பட்டர் பேப்பர் போட்ட பேக்கிங் டிரேயில் ஊற்றி, ஸ்பூனால் சமப்படுத்தி, 200 டிகிரி செல்சியஸில் 5 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யப்பட அவனில், 15-20 நிமிடங்கள் 150 டிகிரி செல்சியஸில் பேக் செய்யவும். ஆறியதும் ஜாம் தடவி மெதுவாக ரோல் செய்து, ஃப்ரிட்ஜில் 1/2 மணி நேரம் வைத்து, பின் வட்ட வட்டமாக வெட்டி பரிமாறவும்.7tVRVXY

Related posts

மினி பான் கேக்

nathan

மைதா  ஃப்ரூட்  கேக்

nathan

பேரீச்சப்பழ கேக்/ Date cake/ டேட்ஸ் கேக்

nathan

ஸ்ட்ராபெர்ரி ஷார்ட் க்ரஸ்ட்

nathan

சாக்லெட் கப் கேக்

nathan

பனானா கேக்

nathan

சுவையான ஆரஞ்சு கேக்!…

sangika

சைவக் கேக் (Vegetarian Cake)

nathan

சாக்லெட் ராஸ்பெர்ரி கேக்

nathan