தற்போது ஆண்கள் பல ஸ்டைல்களில் தாடியை வைத்து, தங்களது அழகை வெளிக்காட்டுகிறார்கள். தாடியை வளர்த்து, அழகாக்கினால் மட்டும் போதாது. அது மென்மையாக இருந்தால் தான், பெண்களை உங்கள் அழகில் மயங்கி விழச் செய்ய முடியும். நிறைய ஆண்கள் தாடி வளர்த்தால், அரிப்பை அனுபவிப்பார்கள்.
எப்படி தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும், மென்மைத்தன்மைக்கும் எண்ணெயைப் பயன்படுத்துகிறோமோ, இதேப் போல் தாடி ஆரோக்கியமாகவும், பட்டுப்போன்றும் இருப்பதற்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும். தாடியின் மென்மையை அதிகரிக்கும் எண்ணெய் எதுவென்று நீங்கள் கேட்கலாம்.
கீழே தாடியின் மென்மைத்தன்மையையும், அதன் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் ஓர் நேச்சுரல் எண்ணெய் குறித்து தான்கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டெப் #1 ஒரு சிறிய பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெயில் சருமத்திற்கு ஈரப்பசையூட்டும் லாரிக் அமிலம் உள்ளது. இது தாடியின் மென்மையை அதிகரிக்கும்.
ஸ்டெப் #2 பின் அதில் ஜோஜோபா ஆயில் சேர்த்து கலந்து கொள்ளவும். ஜொஜோபா ஆயில் அதிகப்படியான எண்ணெயை வெளியேற்றிவிடும்.
ஸ்டெப் #3 பின்பு அத்துடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும். இதனால் பாதாமில் உள்ள வைட்டமின் ஏ, கோன்றவை சருமத்தை ஈரப்பதமட்டுமம்.
ஸ்டெப் #4 பிறகு அதில் சந்தன எண்ணெயை 4 துளிகள் சேர்த்து கலக்க வேண்டும். இதனால் தாடிக்கு பயன்படுத்தும் எண்ணெய் மென்மையாகவும், நறுமணத்துடனும் இருக்கும்.
ஸ்டேப் #5 ஒருவேளை தாடியில் அரிப்பு அதிகமாக இருந்தால், அந்த கலவையுடன் 2-3 துளிகள் டீ-ட்ரீ எண்ணெயை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் அரிப்புக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
ஸ்டெப் #6 இறுதியில் கலந்து வைத்துள்ள கலவையை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி மூடி, 1 நிமிடம் நன்கு குலுக்கினால், எண்ணெய் தயார்!
ஸ்டேப் #7 பின்பு 2-3 துளிகள் எண்ணெயை கையில் எடுத்துக் கொண்டு, நன்கு தேய்த்து, பின் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.