சிறு ஆணியும் பல் குத்த உதவும். அப்படித்தான் ஹேர்பின் எப்படியெல்லாம் நமக்கு உபயோகமாகிறது என்பற்கான குறிப்புகள்தான் இங்கே சொல்லியிருக்கிறோம்.
உங்கள் கூந்தலை எவ்வாறு ஹேர்பின்களின் மூலம் அலங்கரிக்கலாம் என்பதை நாங்கள் விளக்க உள்ளோம். நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத சிறப்பான அலங்கார வழிகளை தெரிந்துகொள்ளலாம்.
இந்த கட்டுரையை தொடர்ந்து படிப்பதன் மூலன் சரியான முறையில் எவ்வாறு ஹேர் கிளிப் மற்றும் ஹேர் பின்களை பயப்படுத்தமுடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் வேடிக்கையான தந்திரங்கள் மூலம் ஹேர் பின்களை அழகாக உபயோகிக்கும் வழிகளை தெரிந்து கொள்ளலாம்.
தலைகீழ் முறை : ‘பாபி பின்’ என்று அழைக்கப்படும் சிறிய வகை ஹேர் பின் வகைகள் கூந்தலில் பயன்படுத்தும் போது தலைகீழ் முறையில் உபயோகப்படுத்த வேண்டும். அந்த ஊக்கின் வளைந்த பகுதி தலைக்கு அருகிலும் அதன் சமமான பகுதி மேல்நோக்கியும் இருக்க வேண்டும்.நீங்கள் இதுநாள் வரை உபயோகித்த முறையை விட இந்த வகையான முறை கூந்தலை பிடிப்பாக வைத்திருக்க உதவும்.
2 ஹேர் ஸ்ப்ரே யுடன் : ஹேர் பின் வகைகளின் மேலே முடி தெளிப்பான்களை உபயோகப்படுத்தினால் அவை அசையாமல் நிலையாக ஓரிடத்தில் இருக்கும். இந்த முடி தெளிப்பான்களை பயன்படுத்துவதனால் ஹேர்பின்களினால் கூந்தலில் ஏற்படும் சிக்குகளை தவிர்க்க முடியும்.
3 . கூந்தலை அடர்த்தியாக்க கூந்தலின் போனி டைல் அமைப்புக்கு கீழ் பட்டர்ப்ளை கிளிப்பை வைத்துக்கொண்டால் அது நல்ல கன அளவை கொடுப்பதுடன் போனி டைல் அலங்காரத்தை மேல்புறமாக உயர்த்த உதவுகிறது.இந்த முறை நிச்சயம் இதுவரை உங்களுக்கு தெரியாத பயனுள்ள குறிப்பாகும்.
4 பாபி பின்களின் மூலம் போனி டைலை உயர்த்துதல் : போனி டைல் அமைப்புக்கு கீழாக கோர்வையாக கூந்தல் கட்டு இருக்கும்.அந்த இடத்தில ‘ பாபி பின்’ என்று அழைக்கப்படும் ஹேர்பின்களை நேராக வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். போனி டைல் அமைப்பை சற்று உயர்த்த இது ஒரு சிறந்த வழியாகும்.
5 . ‘பாபி பின் பன்’ : ஹேர் பின்களின் மூலம் கூந்தலின் கொண்டை அமைப்பை நேர்த்தியாக அமைக்க முடியும். கொண்டை அமைப்புக்கு எந்த மாற்றமும் ஏற்படாமல் நீங்கள் விரும்பும் வகையில் சிறப்பாக வைத்து கொள்ள இந்த வகையான அலங்காரம் உதவுகிறது.
முன்முடி அமைப்பிற்கு ஹேர்பின்களை உபயோகித்தல்: சதுரமாக வெட்டப்பட்ட முன்முடி அமைப்பை மாற்றி அலங்கரிக்க இரண்டு ஹேர்பின்களை கொண்டு குறுக்கு மறுக்காக வைத்து கூந்தலை பின்புறமாக பின்னிக்கொள்ள முடியும். இந்த வகை ஊக்கிகளை கொண்டு கூந்தலை மிகச்சிறப்பாக அழகு படுத்த முடியும்.
7 . கூந்தலின் பின்னல்களுக்கு உதவும் ‘பாபி பின்’ : பல்வேறு பின்னல்கள் மூலம் கூந்தலை ஹேர்பின்கள் கொண்டு உட்புறமாக அலங்கரிக்க முடியும். இதன் மூலம் அந்த பின்னல் கலையாமல் நாள் முழுவதும் இருக்கும். இவ்வாறான கூந்தல் கிளிப் மற்றும் ஹேர் பின் வகைகளின் மூலம் கூந்தலை மிகச்சிறப்பாக அழகு படுத்த முடியும்.