36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
முகப் பராமரிப்பு

உடனடியா முகம் பளிச்சிட வேண்டுமா? இந்த சித்த மருத்துவ குறிப்பை ட்ரை பண்ணுங்க!!

சித்த மருத்துவம் விலை மதிப்பில்லாதது. இது எந்த வித செயற்கை காரணிகள் இல்லாமல் உடல் உறுப்புகளை இயற்கையாக மேம்படுத்தும்.

ஆரோக்கியம் மட்டுமல்லாது அழகையும் தருகிறது. அப்படி இயற்கை வழியில் உங்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை எப்படி அழகு படுத்தலாம் என்பதுதான் இங்கே சொல்லப்பட்டுள்ளது.

முகம் உடனடியாக பளிச்சிட: ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவவேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

தேவையற்ற முடியை அகற்ற : முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும்இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

கூந்தல் பிசுபிசுப்பை நீக்க : கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், முட்டையின் வெள்ளைக் கருவில் கொஞ்சம் சர்க்கரையை கலந்துதலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடிஅழகு பெறும்.

கூந்தல் பளபளப்பாக : தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக்குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

வெயிலில் கறுத்து போகாமலிருக்க : வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம்குரு வராமல், வெயிலில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

கண்கள் பிரகாசமாக இருக்க : இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள்பிரகாசமாக இருக்கும்.

மூட்டு கறுப்பை போக்க : கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றைதேய்த்து வந்தால் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.

Related posts

தக்காளி மாதிரி தகதகனு மின்னணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் மாஸ்க்குகளை யூஸ் பண்ணுங்க!

nathan

அம்மை வடு அகல

nathan

ஆண்களே! உங்கள் முகத்தைக் கருப்பாக காட்டும் அழுக்கைப் போக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

nathan

ஹெர்பல் ஃபேஷியல்

nathan

உட்காரும் இடத்தில் பருக்கள் உண்டாக இவை தான் காரணம்!…

sangika

சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும்…

sangika

இளமையான சருமத்தை தரும் சிவப்பு திராட்சை ஃபேஸியல் மாஸ்க் !!

nathan

பெண்களே வெள்ளையாகணுமா? அப்ப பாலைக் கொண்டு இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..! !

nathan

உங்களுக்கு தோல் சுருக்கங்களை இயற்கையான முறையில் நீங்கணுமா?இதோ ஈஸியான டிப்ஸ்.

nathan