22 1482388175 8 dandruff before after
தலைமுடி சிகிச்சை

பொடுகுத் தொல்லை அதிகமா இருக்கா? அப்ப இத யூஸ் பண்ணுங்க…

உங்கள் தலையில் பொடுகு அதிகமாக உள்ளதா? உங்கள் தலைமுடி கொத்தாக உதிர்வதைக் கண்டு அஞ்சுகிறீர்களா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இக்கட்டுரையில் பொடுகுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் ஓர் ஹேர் மாஸ்க் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஹேர் மாஸ்க்கில் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் ஏராளமாக உள்ளது. மேலும் இதில் சேர்க்கப்படும் எலுமிச்சையில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள் இருப்பதால், ஸ்கால்ப்பில் உள்ள தொற்றுக்கள் அழிக்கப்பட்டு, ஸ்கால்ப் சுத்தமாக இருக்கும். சரி, இப்போது பொடுகுத் தொல்லையில் இருந்து விடுதலை அளிக்கும் ஹேர் மாஸ்க்கை எப்படி போடுவதென்று காண்போம்.

ஸ்டெப் #1 முதலில் 1/2 கப் தயிரை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #2 பின் அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #3 அடுத்து 1 டேபிள் ஸ்பூன் தேனை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பலரும் தேன் முடியை வெள்ளையாக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தேன் மயிர்கால்களுக்கு ஈரப்பதமூட்டி, முடியை மென்மையாக வைத்துக் கொள்ளும்.

ஸ்டெப் #4 பின்பு அத்துடன் 3-4 துளிகள் டீ-ட்ரீ எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். டீ-ட்ரீ எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள் உள்ளது. இது பொடுகை எளிதில் அழித்து விரட்டும்.

ஸ்டெப் #5
பின் தலைமுடியை சீப்பால் சீவி, சிக்கு எடுத்துவிட வேண்டும். ஒருவேளை தலைமுடி மிகவும் வறட்சியுடன் இருந்தால், தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவ வேண்டும்.

ஸ்டெப் #6 பின்பு கலந்து வைத்துள்ள கலவையை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவ வேண்டும்.

ஸ்டெப் #7 பின் 1 மணிநேரம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு நன்கு தலைமுடியை அலச வேண்டும்.

குறிப்பு இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 1 முறை தலைக்கு போட்டு வந்தால், தலையில் உள்ள பொடுகு நீங்கி, தலைமுடி ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்கும்.

22 1482388175 8 dandruff before after

Related posts

முடி உதிர்வுக்கு எளிய தீர்வு.! சொட்டையை தடுப்பதில் முக்கிய பங்கு பலாவுக்கு உண்டு.!

nathan

தலைமுடியை வலிமையாக்கும் வீட்டு வைத்தியம்

nathan

எவ்வித பக்கவிளைவும் இல்லாத ஷாம்பூ கண்டிஷனர் மாஸ்க்

nathan

கூந்தலுக்கு சூப்பரான டிப்ஸ்!

nathan

கூந்தல் வேகமாய் வளர என்ன செய்ய வேண்டும்??

nathan

கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி

nathan

உங்க நரை முடியை மீண்டும் கருகருன்னு மாத்த…சூப்பர் டிப்ஸ்

nathan

உங்கள் கூந்தல் வளர்ச்சியை எப்படி மெருகேத்தலாம்? தெரிந்துகொள்வோமா?

nathan

சூரியனிடமிருந்து கூந்தலை எப்படி பாதுகாக்கலாம் தெரியுமா?

nathan