27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
1480842135 7923
சைவம்

கிராமத்து பச்சை மொச்சை குழம்பு….

தேவையான பொருட்கள்:

பச்சை மொச்சை – 1/4 கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 3
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தேங்காய் விழுது – அரை கப்
மிளகாய் தூள் – இரண்டு டீ ஸ்பூன்
தனியா தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கடுகு, உளுந்து – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

பச்சை மொச்சையை சிறிதளவு உப்பு சேர்த்து வெங்காயம், பச்சை மிளாகாயுடன் சேர்த்து வேகவைத்து கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணைய் ஊற்றி சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, குழம்பு தூள் அதாவது மிளகாய், தனியா, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். அத்துடன் தேங்காய் சேர்த்து வதக்கி மொத்தமாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். மீதமுள்ள சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும், தக்காளியை சேர்த்து குழையும் வரை வதக்கவும். இத்துடன் அரைத்த கலவையை போட்டு வதக்கவும். இந்த கலவையில் வேகவைத்த மொச்சையை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தேவையெனில் உப்பு சேர்க்கலாம். குழம்பு கொதிக்கும் போது 1 ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றி அடுப்பை மிதமாக எரிய விடவும். குழம்பு கிரேவி பதத்திற்கு வந்த உடன் காய்ந்ததும் இறக்கிவிடவும். சுவையான பச்சை மொச்சை குழம்பு ரெடி. சூடான சாதத்திற்கோ, இட்லிக்கோ ஊற்றி சாப்பிட சூப்பராக இருக்கும்.1480842135 7923

Related posts

பாகற்காய் வறுவல்

nathan

குதிரைவாலி கொத்தமல்லி சாதம்

nathan

சுவையான கடலைப்பருப்பு தேங்காய் குழம்பு

nathan

பூரிக்கு சூப்பரான சைடுடிஷ் வடகறி

nathan

சத்தான சுவையான பருப்பு திணை கிச்சடி

nathan

பக்கோடா குழம்பு

nathan

சுரைக்காய் கூட்டு

nathan

பச்சை பயறு கடையல்

nathan

சுவையான குடைமிளகாய் காளான் மிளகு வறுவல்

nathan