blackheads remedies 20 1482222627
முகப் பராமரிப்பு

முகத்தில் சொரசொரவென்று அசிங்கமாக இருக்கும் கரும்புள்ளிகளைப் போக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

கரும்புள்ளிகள் நம் முகத்தில் மூக்கு, தாடை, கன்னம் போன்ற பகுதிகளில் சொரசொரவென்று இருக்கும். முகப்பருக்களின் ஆரம்ப நிலை தான் கரும்புள்ளிகள். கரும்புள்ளிகள் தான் நாளடைவில் பருக்களாக உருவாகின்றன. இந்த கரும்புள்ளிகள் உடலில் ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும் போது வரும்.

மேலும் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருந்தாலும், கரும்புள்ளிகள் வரும். அவ்வப்போது முகத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுக்காமல் இருந்தாலும், கரும்புள்ளிகள் வரும். இத்தகைய கரும்புள்ளிகளைப் போக்க சில பாட்டி வைத்தியங்கள் உள்ளது. அவற்றைப் பின்பற்றினால், கரும்புள்ளிகள் வேகமாக போய்விடும்.

வைத்தியம் #1
1 டீஸ்பூன் வேர்க்கடலை எண்ணெயுடன், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவ கரும்புள்ளிகள் உருவாவது தடுக்கப்படும்.

வைத்தியம் #2
வெந்தயக் கீரையை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலமும், கரும்புள்ளிகளைப் போக்கலாம்.

வைத்தியம் #3
தேன் மருத்துவ குணம் நிறைந்த ஒரு பொருள். அந்த தேனை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் மீது தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

வைத்தியம் #4
முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, கரும்புள்ளிகளை முற்றிலும் போக்கலாம்.

வைத்தியம் #5
பாதி எலுமிச்சையைப் பிழிந்து, அதில் 3-4 துளிகள் தேனை சேர்த்து கலந்து, கரும்புள்ளிகள் இருக்கும் மூக்கு, கன்னம், தாடை போன்ற பகுதிகளில் தடவி 5 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.blackheads remedies 20 1482222627

Related posts

இளமையைத் தக்க வைத்துக் கொள்ள இத செய்யுங்கள்!…

sangika

சூப்பர் டிப்ஸ் மூக்கில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் வீட்டு வைத்தியம்

nathan

உங்களுக்கு தெரியுமா பாதாம் தோலை அழகுக்காக இப்படி யூஸ் பண்ணலாமா!

nathan

தக்காளி பேஷியல்

nathan

உங்க முகத்தை என்றும் இளமையாக வைத்து பட்டுப்போல மாற்றும் ஆளி விதை…! சூப்பர் டிப்ஸ்

nathan

பளிச் தோற்றத்திற்கு மாம்பழக் கூழ் பேஷியல்

nathan

பவுடர் போட போறீங்களா

nathan

எண்ணெய் சருமத்தை தடுப்பது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா இயற்கையான முறையின் மூலம் கண் கருவளையத்தை போக்க!

nathan