19 1482146062 scalp
தலைமுடி சிகிச்சை

ஷாம்புவா? இல்லை கண்டிஷனரா? எதை முதலில் பயன்படுத்த வேண்டும்?

தலைக்கு ஷாம்பு போட்டு குளித்ததும் கண்டிஷனர் போட வேண்டும் என நீங்கள் அறிந்திருப்பீர்கல். ஆனால் அதை ஏன் போடவேண்டும் எப்படி போட வேண்டும் என தெரிவதில்லை.

கண்டிஷனர் கூந்தலுக்கு ஈரப்பதம் அளித்து பலம் அளித்தாலும் அதனை தவ்றாக உபயோகபப்டுத்தும்போது கூந்தல் சேதமடைகிறது. அதனை உபயோகப்படுத்தும்போது நீங்கள் செய்யும் தவறுகள் பற்றி காண்போம்.

ஸ்கால்ப்பில் போடுவது : நினைவில் கொள்ளுங்கள். உங்கள் ஸ்கால்ப்பில் உயிரோட்டம் இருப்பதால் அங்கே கண்டிஷனர் தேவையில்லை. இயற்கை எண்ணெய் சுரப்பதால் வேர்கால்களை நமது சருமம் பாதுகாத்துக் கொள்ளும். ஆனால் அங்கே கண்டிஷனர் போடும்போது கூந்தல் பலமிழந்து , உதிர்தல் உண்டாகிறது.

அதிகம் பயன்படுத்துதல் : மிகக் குறைந்த அளவே கண்டிஷனர் போதுமானது. ஆனால் அதிகமாக உபயோகபடுத்தும்போது உங்கல் முடியை ஈங்கள் இழக்க வேண்டியது வரும்.

தொடர்ந்து பயனபடுத்தவில்லையென்றால் : உங்களுக்கு கூந்தல் நல்ல நிலையில் இருந்தாலும், ஷாம்பு உபயோகிக்கும்போதெல்லாம் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் ஷாம்பு உங்கள் கூந்தலில் அதிக வறட்சியை கொடுத்து பலமிழக்கச் செய்யும். ஆகவே ஷாம்பு உபயோகிக்கும்போதெல்லாம் கண்டிஷனர் உபயோகித்தால் முடி உதிர்வை தவிர்க்கலாம்.

ஆழ்ந்த கண்டிஷனர் : உங்கள் கூந்தலுக்கு கட்டாயம் ஆழ்ந்த கண்டிஷனர் தரப்பட வேண்டும். இதனால் கூந்தல் வறட்சி, முடி உடைதல் ஆகிய்வற்றை தவிர்க்கலாம். ஆலிவ் எண்ணெய் மற்றும் ஜொஜொபா என்ணெய் , முட்டை ஆகியவை கலந்து செய்த கண்டிஷனர் உங்கள் கூந்தலுக்கு வலுவூட்டும்.

டூ- இன் -ஒன் : விளம்பரங்களில் வரும் டூ இன் ஒன் ஷாம்புக்கள் உங்கள் கூந்தலுக்கு பலம் தராது. ஏனென்றால் கூந்தலின் நுனிக்கு கண்டிஷனர் அதிகம் தேவை. ஷாம்புக்களில் இருக்கும் கண்டிஷனர் பயன் தராது.

அதிக நேரம் இருக்கக் கூடாது : கண்டிஷனர் பயன்படுத்தி அதிக நேரம் அப்படியே விடக் கூடாது. அதிகபட்சம் 2 நிமிடங்கள் இருந்தால் போதுமானது என்று கூந்தல் பராமரிப்பு நிபுணர்கள் கூறுகிறார்கள்.

எதை முதலில் பயன்படுத்துவது?as நாம் அனைவரும் ஷாம்பு பயன்படுத்தி பின்னர் கண்டிஷனர் பயன்படுத்துகிறோம். ஆனால் உண்மையில் கண்டிஷனர் பயன்படுத்தி சில நிமிடங்களில் தலையை அலசி அதன்பின் ஷாம்புவை போடவேண்டும்.. அதாவது கண்டிஷனரை கழுவத்தான் ஷாம்புவை பயன்படுத்த வெண்டும்.
19 1482146062 scalp

Related posts

சூப்பர் டிப்ஸ்.. பெண்களுக்கு முகத்தில் முடிகள் வருவதற்கான காரணமும் – தீர்க்கும் இயற்கை வழிமுறையும்

nathan

பொடுகை விரட்ட உப்பை எப்படி பயன்படுத்தலாம் என தெரியுமா?

nathan

எண்ணெய்ப் பசையான கூந்தல்

nathan

தெரிஞ்சிக்கங்க…கோடையில் முடி கொட்டுவது எதனால் என்று தெரியுமா…?

nathan

அவசியம் படிக்க.. உங்க முடி உங்களை பற்றி சொல்கின்ற சுவாரசிய தகவல்கள் பற்றி தெரியுமா…?

nathan

கோடை காலத்தில் கூந்தல் வறட்சியை போக்கும் இயற்கை வழிகள்

nathan

எலி வால் போல கூந்தல் அசிங்கமா இருக்க? அப்ப இத செய்யுங்க ….

nathan

உங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க.

nathan

தலைமுடியின் வளர்ச்சியை தூண்டும் வெந்தயக்கீரை

nathan