1480077423 3282
சிற்றுண்டி வகைகள்

இறாலில் செய்திடலாம் பஜ்ஜி…!!

தேவையான பொருட்கள்:

இறால் (பெரியது) – 500 கிராம்
மைதா மாவு – 250 கிராம்
சோள மாவு – ஒரு மேசைக்கரண்டி
பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி
கேசரி பவுடர் – சிறிது
நசுக்கிய பூண்டு – 8 பற்கள்
மிளகுத் தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். மைதா மாவுடன் சோள மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும். சலித்த மாவுடன் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து 2 மணி நேரம் புளிக்கவிடவும்.

இறாலின் தோலை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் பூண்டை நசுக்கிப் போடவும் (அல்லது) இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். அத்துடன் கேசரி பவுடர், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு, இறாலை மைதா மாவுக் கரைசலில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.

சுவையான இறால் பஜ்ஜி ரெடி. இதை சில்லி சாஸ் உடன் சாப்பிட சுவையானதாக இருக்கும்.1480077423 3282

Related posts

அரைத்தமாவு தட்டை

nathan

சத்தான மொச்சை கேழ்வரகு ரொட்டி

nathan

மெக்ஸிகன் டா கோஸ் (Mexican Taccos)

nathan

சீஸ் ரோல்

nathan

உருளைக்கிழங்கு பொரியல்

nathan

அவல் வேர்க்கடலை பக்கோடா…

nathan

ஆப்பம் வீட்டில் தயாரிக்கும் முறை

nathan

பால் அப்பம்

nathan

சுவையான உருளைக்கிழங்கு சமோசா

nathan