27 C
Chennai
Thursday, Mar 12, 2026
201704211303305973 aloo Bhatura. L styvpf
சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு பட்டூரா

உருளைக்கிழங்கை வைத்து செய்யும் இந்த பட்டூரா சூப்பராக இருக்கும். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். இன்று இந்த ஆலு பட்டூராவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு பட்டூரா
தேவையான பொருட்கள் :

மைதா அல்லது கோதுமை மாவு – 2 கப்,
உருளைக்கிழங்கு – 250 கிராம்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு, சிறிது சிறிதாக மைதா அல்லது கோதுமை மாவு மற்றும் உப்பையும் சேர்த்து மிருதுவான மாவாக பிசையவும். (தண்ணீர் சேர்க்க வேண்டும்).

* பிறகு மாவை உருண்டைகளாக்கி, மைதா மாவில் புரட்டி, சற்று கனமாக பூரிகளாக இடவும்.

* ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் உருட்டி வைத்த பூரியை ஒவ்வொன்றாக போட்டு பொரிக்கவும்.

* ஆலு பட்டூரா ரெடி.

குறிப்பு: மாவைக் கலந்தபின் நீண்ட நேரம் வைக்காமல் உடனே பொரிக்கவும். இல்லைஎன்றால், மாவு தளர்ந்து விடும்.201704211303305973 aloo Bhatura. L styvpf

Related posts

சுவையான சத்தான ஒட்ஸ் வெஜ் ஊத்தப்பம்

nathan

சுவையான மங்களூர் பஜ்ஜி

nathan

கிராமிய மணத்துடன் கலக்கல் கமர்கட்டு

nathan

மாலைநேர ஸ்நாக்ஸ் ஸ்பைஸி சிக்கன் போண்டா

nathan

மிலி ஜுலி சப்ஜி

nathan

ஒக்காரை

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா

nathan

சத்தான முடக்கத்தான் – கம்பு தோசை

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு பூரி

nathan