லிப்ஸ்டிக் போடுவதற்கு மாற்றாகத்தான் லிப் பாம் வந்தது. எல்லாருமே உதட்டை பாதுகாக்கதான் லிப் பாம் எனு நினைக்கிறோம்.
ஆனால் லிப் பாமிலும் சிவப்பாக தெரியும்படி பல நிறமிகள், ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால் அவை பாதுகாப்பதற்கு பதிலாக பாழாக்கும்.
அவ்வாறு எந்த மாதிரியான லிப் பாம் உங்கள் உதட்டிற்கு போடக் கூடாது என தெரியுமா?
சூயிங் கம் வாசனை : பல லிப் பாம்கள் பப்பிள் கம் வாசனையில் வருகிறது. இவை நல்லதல்ல. இவற்றில் அலர்ஜியை உண்டக்கும் பொருட்கள் உள்ளன. இவை எரிச்சலை தரும்.
அதுபோலவே பட்டையின் வாசனையிலும் லிப் பாம்கள் தயாரிக்கப்படுகிறது. அவையும் உதட்டை பாதிக்கும் காரணிகள் என்று சரும நிபுணர் மாட்ஃபெஸ் கூறுகிறார்.
மென்தால் அல்லது ஃபீனால் : உதட்டில் சில்லென்று இருப்பதற்காக மென்தால் கலந்த லிப் பாம் மார்கெட்டில் விற்கப்படுகிறது. இவை உதட்டை முற்றிலும் கருத்துப் போகச் செய்யும். சருமத்திற்கும் கேடு விளைவிக்கும்.
விட்டமின் ஈ : விட்டமின் ஈ உதட்டிற்கு நல்லது என பலரும் தவறாக நினைக்கிறார்கள். விட்டமின் ஈ எல்லா சருமத்திற்கும் உகந்ததல்ல. அலர்ஜியை உண்டாக்கும் தன்மை கொண்டது. ஆகவே விட்டமின் ஈ கொண்ட லிப் பாம்களை உபயோகப்படுத்த வேண்டாம்.
எந்த மாதிரியான பொருட்கள் உள்ள லிப் பாமை உபயோகிக்கலாம்? தேன் மெழுகு, மற்றும் பெட்ரோலியம் ஜெல்லி ஆகியவை உள்ள லிப் பாமை உபயோகிக்கலாம். பொதினா, மாதுளை, பீட்ரூட், கொண்டு நீங்களே வீட்டில் தயாரித்து போடுவது அருமையான பலன் தரும்.
எந்த மாதிரியான பொருட்கள் உள்ள லிப் பாமை உபயோகிக்கலாம்? வாசனையில்லாத லிப் பாமையும் சரும ஆலோசகர்கள் பரிந்துரைக்கிறார்கள். எந்த லிப் பாம் வாங்கினாலும் அதில் வாசனையற்ற மற்றும் நிறங்கள் தராதவற்றை மட்டுமே உபயோகிப்பது நல்லது.