ஆஸ்பிரின் ஒரு வலி நிவாரணி மாத்திரை. இந்த மாத்திரை ஒவ்வொருவரது வீட்டிலும் நிச்சயம் இருக்கும். சிலர் இந்த மாத்திரை பாட்டிலை எப்போதுமே வீட்டில் வைத்திருப்பார்கள். இந்த மாத்திரை தலை வலி மற்றும் இதர வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
ஆஸ்பிரின் மாத்திரை வலியைப் போக்க உதவுவதோடு மட்டுமின்றி, நம் அழகைப் பராமரிக்கவும் உதவுகிறது. குறிப்பாக தலைமுடி சம்பந்தப்பட்ட ஒரு பெரிய பிரச்சனையைப் போக்க வல்லது. சரி, இப்போது ஆஸ்பிரின் மாத்திரை நமது எந்த அழகு பிரச்சனைக்கு தீர்வளிக்க உதவுகிறது என்று காண்போம்.
பொடுகைப் போக்கும் போராளி ஆஸ்பிரின் மாத்திரையில் சாலிசிலிக் அமிலம் உள்ளது. இந்த கெமிக்கல் பல விஷயங்களைச் செய்யும். இது ஈரப்பதமூட்டும் சக்தி கொண்டது மற்றும் தலையில் வரும் பொடுகையும் போக்கக்கூடியது. இப்போது பொடுகைப் போக்க ஆஸ்பிரின் மாத்திரையை எப்படி பயன்படுத்துவது என்று காண்போம்.
தேவையான பொருட்கள்: ஆஸ்பிரின் மாத்திரை – 3 ஷாம்பு – தேவையான அளவு
பயன்படுத்தும் முறை: ஆஸ்பிரின் மாத்திரையை பொடி செய்து கொண்டு, ஷாம்புவுடன் கலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை சிறிது நேரம் மசாஜ் செய்து, 5 நிமிடங்கள் கழித்து அலச வேண்டும்.
சருமத்தைப் பாதுகாக்கும் ஆஸ்பிரின் மாத்திரையில் உள்ள சாலிசிலிக் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் இறந்த செல்களை நீக்கும். இதனால் முகப்பரு மற்றும் சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்: ஆஸ்பிரின் மாத்திரை – 5 தண்ணீர் – சிறிது தேன் – 1 டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை: ஆஸ்பிரின் மாத்திரையை பொடி செய்து, 1/4 கப் நீர் மற்றும் தேன் கலந்து, சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் பருக்கள் விரைவில் மறையும்.