34.1 C
Chennai
Monday, Jul 13, 2026
முகப் பராமரிப்பு

என்ன செஞ்சாலும் முகம் வறண்டு எரிச்சல் தருதா? இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க!அப்றம் சொல்லுங்க!!

சருமம் என்ன செய்தாலும் வறண்டு போய்விடும் இந்த குளிர்காலத்தில். குறிப்பாக கை, கால் சுருக்கமடைந்து எரியும். இதற்கு எத்தனை தடவைதான் மாய்ஸ்ரைஸர் உபயோகப்படுத்துவது என அலுத்துக் கொள்கிறீர்களா?

கடைகளில் விற்கும் க்ரீம் தற்போதைக்கு ஆறுதல் அளித்தாலும் அதிலுள்ள ரசாயனங்கள் சருமத்தை மேலும் வறட்சியாக்கும். இங்கே சொல்லப்பட்டிருக்கும் ரெசிபி ட்ரை பண்ணுங்க. பிறகு சொல்லுங்க

தேவையானவை : சுத்தமான தேங்காய் எண்ணெய் – கால் கப் கோகோ பட்டர் – முக்கால் கப் ஆலிவ் எண்ணெய் – 2 ஸ்பூன் வாசனை எண்ணெய் – சில துளிகள்

வறண்ட சருமத்தில் செயல் புரியும் : சுத்தமான தேங்காய் எண்ணெய் உறையும் இது உடலுக்கு தேவையான ஈரப்பதத்தை தரும். கோகோ பட்டர் சரும செல்களுக்கு போஷாக்கும், ஆலிவ் எண்ணெய் பொலிவையும் தரும். வாசனை எண்ணெய் பாதாம், லாவெண்டர் என ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம்.

செய்முறை : முதலில் எல்லாவ்ற்றையும் ஒன்றாக கலந்து லேசாக சூடுபடுத்துங்கள். பிறகு ஆற வைத்து அந்த எண்ணெயை சருமத்தில் தடவிக் கொள்ளுங்கள்

பலன் : தினமும் காலை மாலை என இரு வேளை தடவினால் அன்று முழுவதும் சருமம் வறட்சி அடையாமல் மிருதுவாகவும் பொலிவாகவும் இருக்கும்.

Related posts

வெள்ளையான சருமம்

nathan

பளிச் தோற்றத்திற்கு மாம்பழக் கூழ் பேஷியல்

nathan

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க

nathan

உங்கள் சருமத்தில் உண்டாகிற இறந்த செல்களை நீக்கி பளிச்சிட செய்ய இதை செய்யுங்கள்.

sangika

முகத்தில் உள்ள கருமையான படலத்தை ரோஸ் வாட்டரைக் கொண்டு நீக்குவது எப்படி?

nathan

முகத்தை நீண்ட காலம் இளமையாக வைக்க கொய்யாப்பழத்தை இப்படி பயன்படுத்துங்க..!

nathan

முகத்தில் எண்ணெய் வழிகிறதா? இந்த ஸ்கரப் ட்ரை பண்ணுங்க… நல்ல மாற்றம் தெரியும்!

nathan

வசீகரிக்கும் வெள்ளை அழகு வேண்டுமா? இதோ டிப்ஸ்

nathan

முகத்தில் அசிங்கமாக காணப்படும் குழிகளைப் போக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க..

nathan