சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கு விருப்பமான இட்லி டிக்கா

குழந்தைகள் இட்லி சாப்பிட மறுப்பார்கள். அவர்களுக்கு இந்த வகையில் இட்லி வைத்து டிக்கா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் செய்முறையை பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான இட்லி டிக்கா
தேவையான பொருட்கள் :

மினி இட்லி – பத்து
வெங்காயம் – ஒன்று
தயிர் – இரண்டு டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
தனியா தூள் – கால் டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
சர்க்கரை – கால் டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
இடித்த பூண்டு – இரண்டு பல்
எண்ணெய் – தேவையான அளவு
குடமிளகாய் – ஒன்று
கபாப் ஸ்டிக் – இரண்டு.

செய்முறை :

* வெங்காயம், குடமிளகாயை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* ஒரு கிண்ணத்தில் தயிர், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, இடித்த பூண்டு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். பிறகு, அதில் இட்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* தவாவில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி காய்ந்ததும் கபாப் ஸ்டிக் எடுத்து அதில் குடமிளகாய் ஒரு துண்டு, இட்லி இரண்டு, வெங்காயம் ஒன்று, இட்லி இரண்டு, குடமிளகாய் ஒன்று ஆகியவற்றை ஒவ்வொன்றாக அடுத்தடுத்து குத்தி தவாவில் வைத்து சிறு தீயில் வைத்து திருப்பி போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.

* சூப்பரான இட்லி டிக்கா ரெடி.

* மினி இட்லிக்கு பதிலாக இட்லியை துண்டுகளாகவும் வெட்டி கொள்ளலாம்.

Related posts

காலிஃப்ளவர் பக்கோடா

nathan

கருப்பட்டி இட்லி

nathan

சத்து நிறைந்த கேரட் – கம்பு அடை

nathan

நவராத்திரி ஸ்பெஷல் ஜவ்வரிசி வடை

nathan

ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் செய்வது எப்படி

nathan

பிரெட் மசாலா

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான டைமண்ட் பிஸ்கெட்

nathan

மட்டன் கிரேவி (தாபா ஸ்டைல்)

nathan

பிரட் ட்ரை குலாப் ஜாமூன்: தீபாவளி ஸ்பெஷல்!

nathan