புரோட்டீன் சத்து உள்ள ஒரு உணவுப் பொருள் தான் இறால். சளிக்கு மிகவும் உகந்தது. மீனைவிட சுவையான (சத்தாண) உணவு சமைத்துப் பாருங்கள் அதன் சுவை நாக்கை விட்டுப்போகாது ஒட்டிக்கொள்ளும்.
தேவையான பொருட்கள்;-
- இறால் – 250 கிராம்
- தேங்காய் – 1 மூடி
- வெங்காயம் – 100 கிராம்
- தக்காளி – 100 கிராம்
- இஞ்சி,பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- எலுமிச்சம் பழம் – 2
- பச்சைமிளகாய் – 5
- எண்ணெய் – தேவைக்கு
- உப்பு – தேவைக்கு
செய்முறை;-
- முதலில் நன்கு கழுவிய இறாலை எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைக்கவும்.தேங்காய்ப் பால் [முதல் பால்] பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
- தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு வைத்து,சிறிது நேரம் கழித்து தோல் உரித்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.(நறுக்கியும் போடலாம்)
- பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கவும்.அத்துடன் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு பச்சைவாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
- பின்பு இறாலையும் சேர்த்து வதக்கிய பின்பு அதில் பிசைந்து வைத்து இருக்கும் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- அத்துடன் தேங்காய்ப் பால் ஊற்றி தேவையான உப்பையும் அதில் சேர்த்து இறால் வேகும் வரை நன்கு சமைக்கவும் பின்பு இறக்கி மேலாக கொத்தமல்லி தழையை தூவவும்..சுவையான கேரளா இறால் கறி தயார்.
- கேரளா இறால் கறியை தோசை,இட்லி,ஆப்பம்,சாதத்துடன் பரிமாறலாம் சுவையாக இருக்கும்.