உதடு பராமரிப்பு

கருப்பான உதடா? அல்லது குளிரில் கருக்கிறதா? விளக்கெண்ணெய் எப்படி உதவும் தெரியுமா?

விளக்கெண்ணெய் நமது பாட்டி காலத்திலிருந்து உபயோகப்படுத்துகிறோம். ஆலிவ் , தேங்காய் எண்ணெய் போல் விளக்கெண்ணெயும் அழகை அதிகரிக்கச் செய்யும்.

கூந்தலுக்கு மட்டுமன்றி உங்கள் சருமத்தின் பிரச்சனைகளையும் போக்குகிறது.விளக்கெண்ணெய் கொண்டு எப்படி உங்களை அழகு படுத்தலாம் என்று அழகு ஆலோசகர் சொல்வதை கேளுங்கள்.

உதடு கருமையை தவிர்க்க : உதடு கருமையை போக்க வேண்டுமென்றால் விளக்கெண்ணெயுடன் சிறிது நீர் சேர்த்து உள்ளங்கையில் தேயுங்கள். வெண்மையாக க்ரீம் போன்று வரும். அதனை உதட்டில் தினமும் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.

க்ளென்ஸர் :
உங்களுக்கு தெரியுமா? விளக்கெண்ணெய் அழுக்கை அகற்றும். சரும துளைகளில் அடைப்பட்டிருக்கும் தூசு, இறந்த செல்களை வெளியேற்றும். விளக்கெண்ணெயால் சிறிது பஞ்சில் நனைத்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

அடர்த்தியான புருவம் கிடைக்க : தினமும் இரவில் ஐ ப்ரோ பென்சிலால் விளக்கெண்ணெயை தொட்டு புருவம் வரைந்து பாருங்கள். அதே போல் புருவம் அடர்த்தியாக வளரும்.

சுருக்கங்கள் மறைய : சம அளவு விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். தினமும் செய்து பாருங்கள். இளமையான சருமம் கிடைக்கும்.

கருவளையம் போக : ஒரு உருளை கிழங்கை வட்ட வடிவில் துண்டாக்கி அதில் விளக்கெண்ணெய் தடவி கண்கள் மீது வையுங்கள். உருளையின் பண்புகள் கலந்த எண்ணெய் உங்கள் கண்களில் மாயாஜாலம் செய்து கருவளையத்தை காணாமல் போக வைக்கும்.

கரும்புள்ளை மறைய :
விளக்கெண்ணெயுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவவும். வாரம் 3 நாட்கள் செய்து பாருங்கள். சுத்தமான சருமம் உங்களுக்கு கிடைக்கும்.

Related posts

குளிர்காலத்தில் உதடுகளை பாதுகாப்பதற்கான வழிகள்

nathan

வறட்சியடைந்து சொரசொரவென்று இருக்கும் உதடுகளை சரிசெய்ய

nathan

உதடுகள் அழகு பெற இயற்கை வழிகள்!

nathan

நம் உதட்டின் இயற்கையான நிறத்தை பெறுவது எப்படி?

nathan

கண்களை‌க் கவரும் உதடுகள்

nathan

உதடுகள் சிவப்பழகை பெற இதை செய்யுங்கள்!…

sangika

உங்க உதடு கருப்பா அசிங்கமா இருக்கா? 10 நிமிடத்தில் அத போக்க இதோ ஓர் வழி!

nathan

வெளிநாடுகளில் மவுசு காட்டும் தமிழர்களின் பாரம்பரிய உணவு!!கொரோனாவை கட்டுப்படுத்தும் ரசம்!

nathan

உதட்டை சுற்றிலும் உண்டாகும் கருமையை போக்க எளிய குறிப்புகள் !!

nathan