27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201703161027575882 fruit hair mask to prevent hair fall SECVPF
தலைமுடி சிகிச்சை

கூந்தல் உதிர்வை தடுக்கும் பழங்களால் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க்

கூந்தலுக்கு போதிய ஈரப்பசை வேண்டுமென்பதற்காக, நிறைய தண்ணீர் குடித்தால் மட்டும் போதாது, ஒரு சில பழ ஹேர் மாஸ்க்கையும் ட்ரை செய்ய வேண்டும்.

கூந்தல் உதிர்வை தடுக்கும் பழங்களால் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க்
கூந்தல் பிரச்சனைகளில் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படுவது கூந்தல் உதிர்தல், முனைகளில் அதிக வெடிப்பு, கூந்தல் வளர்ச்சி குறைவு என்று தான். இதற்கெல்லாம் காரணம், மோசமான டயட், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சரியான கூந்தல் பராமரிப்பு இல்லாதது மற்றும் மாசடைந்து சுற்றுச்சூழல் போன்றவையே.

கூந்தலுக்கு போதிய ஈரப்பசை வேண்டுமென்பதற்காக, நிறைய தண்ணீர் குடித்தால் மட்டும் போதாது, ஒரு சில பழ ஹேர் மாஸ்க்கையும் ட்ரை செய்ய வேண்டும்.

* கூந்தல் வெடிப்பிற்கும், பொலிவிழந்த கூந்தலுக்கும் வாழைப்பழம் தான் சிறந்தது. இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதுமானது. இந்த பழ ஹேர் மாஸ்க்கிற்கு கூந்தலுக்கு ஏற்ற அளவு வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டு, அதை நன்கு மசித்து, சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு நன்கு கலந்து, ஸ்கால்ப் மற்றும் கூந்தலில் படும் படி தேய்த்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால், ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனால் கூந்தல் நன்கு பட்டுப்போன்று, மென்மையாக இருக்கும்.

* கொய்யாவில் இருக்கும் வைட்டமின் ஏ, கூந்தல் வளர்வதிலும், பாதிப்படைந்த செல்கள் புதுப்பிக்கப்படவும் உதவுகிறது. அதற்கு நன்கு கனிந்த கொய்யா பழத்தை எடுத்துக் கொண்டு, நன்கு மசித்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு கலந்து, தலைக்கு நன்கு தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அதனை மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் பொடுகு இருந்தாலும் போய்விடும்.

* பப்பாளி ஒரு இயற்கையான சரும செல்கள் மற்றும் கூந்தலை நன்கு சுத்தம் செய்யும் பொருள். அத்தகைய கனிந்த பப்பாளியுடன், பால், தயிர் சேர்த்து, நன்கு நைசாக மசித்து, பின் அவற்றை கூந்தலுக்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிக்க வேண்டும்.

– மேற்கூறியவையெல்லாம் வீட்லேயே செய்யக்கூடிய ஹேர் மாஸ்க். இந்த மாஸ்க் போடும் போதெல்லாம், தலையில் கொஞ்சம் எண்ணெய் இருக்க வேண்டும். இல்லையெனில் மாஸ்க் போட்ட பின்பு, வலி ஏற்படும். ஆகவே தலைக்கு மாஸ்க் போடும் முன், இரவில் படுக்கும் போது தலைக்கு எண்ணெய் தடவி, மறுநாள் காலையில் ஹேர் மாஸ்க் போட்டால் நல்லது. 201703161027575882 fruit hair mask to prevent hair fall SECVPF

Related posts

பளபளப்பான நீண்ட கூந்தலை பெற இந்த விதையை உபயோகித்திருக்கிறீர்களா?

nathan

பூண்டோடு ‘இந்த’ பொருட்களை சேர்த்து யூஸ் பண்ணா… அடர்த்தியா முடி வளருமாம்!

nathan

குளிர்காலத்தில் உங்க கூந்தல் பராமரிக்க சில டிப்ஸ்…

nathan

உங்க கூந்தல் வளர என்ன செய்யலாம்?அப்ப இத படிங்க!

nathan

நிரந்தரமாக பொடுகை போக்க வேண்டுமா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

முயன்று பாருங்கள்.. வீட்டிலேயே தயாரிக்கலாம்! தலை முடி வளர்ச்சியை தூண்டும் மூலிகை தைலம்.

nathan

இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம்

nathan

முல்தானி மட்டியில் இத கலந்து யூஸ் பண்ணினா முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை வரவே வராது தெரியுமா!!

nathan

tips.. அவசியம் செய்யவேண்டியவை..! எந்தெந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.?

nathan