அசைவ வகைகள்

மட்டன் சுக்கா

என்னென்ன தேவை?

மட்டன் – கால் கிலோ

வெங்காயம் – 1

இஞ்சி – சிறு துண்டு

பூண்டு – 6 பல்

பட்டை, கிராம்பு – சிறிதளவு

மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

தனி மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – சிறிதளவு

முந்திரி – 10

சோம்பு – அரை டீஸ்பூன்

தேங்காய் – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு

என்னென்ன தேவை?

வெங்காயம், இஞ்சி, பூண்டு, சோம்பு இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த விழுது, மிளகாய்த் தூள், மிளகுப் பொடி, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைக் கறியோடு நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் ஐந்து விசில் வரும்வரை வேகவிடுங்கள்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை போட்டுத் தாளியுங்கள். வேகவைத்த கறியை அதில் சேர்த்து நன்றாகச் சுருண்டு வரும்வரை வதக்குங்கள். வறுத்த முந்திரி, தேங்காய்த் துண்டுகளைச் சேருங்கள். சிறிதளவு கொத்தமல்லி, கறிவேப்பிலையைச் சேர்த்து இறக்கிவையுங்கள். சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுக்கு இதைத் தொட்டுக்கொள்ளலாம்.mutton 3142644f

Related posts

Prawn Briyani / இறால் பிரியாணி

nathan

ஆட்டுக்கால் பாயா | attukal paya

nathan

திருநெல்வெலி மட்டன் குழம்பு:

nathan

சூப்பரான முட்டை மஞ்சூரியன் செய்வது எப்படி ??

nathan

சுவையான மீன் சூப் இவ்வாறு செய்து சாப்பிடுங்கள்…..

sangika

முட்டை சில்லி

nathan

முட்டை தோசை

nathan

சிக்கன் ப்ரை / Chicken Fry

nathan

சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு

nathan