1475755960 4382 1
சைவம்

மீல் மேக்கர் குருமா செய்வது எப்படி என்பதை பார்ப்போம்…

தேவையான பொருட்கள்:

மீல் மேக்கர் – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் – 3/4 ஸ்பூன்
தனியா தூள் – 1/2 ஸ்பூன்
சீரக தூள் – 1/2 ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
தேங்காய் பால் – 1/2 கப்
உப்பு – 3/4 ஸ்பூன்
எண்ணெய் – 4 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

முதலில் மீல் மேக்கரை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கவும்.

பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். பின் அதில் மஞ்சள் தூள், சீரகப் பொடி, தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும். அதில் மீல் மேக்கர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவை மிகுந்த மீல் மேக்கர் குருமா தயார்.1475755960 4382

Related posts

சைனீஸ் ஃபிரைடு ரைஸ்

nathan

சத்தான பாலக் சப்பாத்தி

nathan

காளான் குழம்பு

nathan

சத்து நிறைந்த வேர்க்கடலை சாதம்

nathan

வாழைக்காய் வெல்லக்கூட்டு

nathan

மிளகு மோர்க்குழம்பு செய்வது எப்படி

nathan

பாலக் பன்னீர் ரெசிபி

nathan

தயிர் உருளை

nathan

சத்தான சுவையான வரகரிசி தக்காளி சாதம்

nathan