yogurt 03 1478155575
முகப் பராமரிப்பு

யோகார்ட் முகத்திற்கு உபயோகப்படுத்தினால் என்னாகும் தெரியுமா?

யோகார்ட் நிறைய கால்சியம் மற்றும் லாக்டிக் அமிலம் கொண்டது. அருமையான சுவை கொண்டது. இது ஆரோக்கியமட்டுமல்ல நமது அழகுபடுத்தவும் நிறைய நன்மைகளை தருகிறது.

யோகார்ட் சருமத்திற்கு மிக அருமையான பலன்களை தருபவை. மாசற்ற முகத்தை தரும்.. யோகார்ட் மாஸ்க் போடுவதால் உங்கள் சருமத்திற்கு என்ன பலனைத் தரும் என்று பார்க்கலாம்.

சூரிய அலர்ஜியை போகும் : சூரிய கதிர்களால் உண்டாகும் தடிப்பு சிவந்து போவது, எரிச்சல் ஆகிய்வற்றிற்கு சிறந்த பலனளிக்கும். இதிலுள்ள ஜிங்க், பாதிப்புகளை குணமாக்கி, வீக்கங்களிலிருந்து சருமத்தை காப்பாற்றும்.

அழுக்குகளை துரத்தும் :
எண்ணெய் சருமம் மற்றும் பெரிய சரும துவாரங்கள் இருப்பவர்களுக்கு அழுக்கு, தூசி எளிதில் படிந்து சருமம் களையிழக்கும். அவர்கள் யோகார்டை முகத்தில் பூசி கழுவி வந்தால் சருமத்தின் ஆழத்திலிருந்து அழுக்குகளை நீக்கி சுத்தமாக வைத்திருக்க உதவும்.

முகப்பருக்களை குறைக்கும் : யோகார்டிலுள்ள நல்ல பேக்டீரியாக்கள் கிருமிகளுக்கு எதிராக சண்டையிடும். முகப்படுக்களின் வீரியத்தை குறைத்து சருமத்தை லேசாக்கும். அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தும்.

கருவளையம் போக்கும் :
கண்களுக்கு கீழே உண்டாகும் கருமையின் மீது செயல்புரிந்து கருவளையத்தை போக்குகிறது. யோகார்டுடன் மஞ்சள் பொடியை சேர்த்து கண்களில் தடவி வந்தால் விரைவாக கருவளையம் மறையும்.

இளமையான சருமத்தை தரும் : சுருக்கங்களை போக்கி, இளமையான சருமத்தை தருகிறது. தினமும் யோகார்டை தடவி வந்தால் சுருக்கங்கள் குறைந்து இளமையான சருமம் பெறலாம்.

ஈரப்பதத்தை தருகிறது : வறண்ட சருமத்திற்கு விரைவில் பலன் தரக் கூடியது. முகம் எளிதில் சுருக்கம் பெறுவதற்கு சருமத்தில் நீர்ப்பற்றாக்குறையும் முக்கிய காரணம். யோகார்ட் சருமத்திற்கு தொடர்ந்து ஈரப்பதம் அளிக்கிறது. முயற்சி செய்து பாருங்கள். பல பலன்களை தரக் கூடியது யோகார்ட்

yogurt 03 1478155575

Related posts

10 நிமிடத்தில் முகத்தில் இருக்கும் தழும்புகள், சுருக்கங்களைப் போக்கும் அற்புத மாஸ்க்!

nathan

பெண்களே உங்க கன்னங்கள் அழகாக ஜொலிக்க இத ட்ரை பண்ணுங்க

nathan

முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவது குறைய

nathan

பருக்கள் வருவதை முழுமையாகத் தடுக்க பூண்டை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

nathan

உங்க முகத்தில் மேடு பள்ளம் அதிகமா இருக்கா? அதை மறைக்க சில டிப்ஸ்…

nathan

‘பளீச்’ஜொலிப்புக்கு வீட்டிலேயே தீர்வு

nathan

உங்களுக்கு தெரியுமா எவ்வளவு கருப்பா இருந்தாலும் இந்த காயை அரைத்து தேய்ச்சா ஒரே வாரத்துல கலராகிடலாம்…

nathan

கோடை வெயில் தூசு மாசிலிருந்து உங்க சருமத்தை பாதுகாத்து பளபளப்பாக ஜொலிக்க வைக்க

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கரும்புள்ளியை நீக்குவதற்கான சில எளிய வழிகள்!!!

nathan