29.8 C
Chennai
Friday, Jul 26, 2024
23 1474621291 haircut
தலைமுடி சிகிச்சை

40-களில் நின்ற கூந்தல் வளர்ச்சியை எப்படி மீட்பது?

பொதுவாக பெண்களுக்கு 30 களில் கூந்தல் வளர்ச்சி தடுமாற்றமாக இருக்கும், 40 களில் சிலருக்கு முற்றிலும் நின்று போயிருக்கும்.

இந்த பிரச்சனை பெரும்பாலன பெண்கள் கூறியிருப்பீர்கள். சிறு வயதில் நிறைய கூந்தல் இருந்தாலும், வயது ஆகும்போது சுற்றுபுற சூழ் நிலை, மன அழுத்தம், வேலை அழுத்தம் என எல்லாம் கலந்து உங்கல் கூந்தலை பதம் பார்க்கும் .

முடி அழகு முக்கால் அழகு என பெரியவர்கள் சொல்வார்கள். நீண்ட ஆரோக்கியமான கூந்தல் 40 களிலும் பெறலாம். இங்கே சொல்லப்பட்டிருக்கும் சில குறிப்புகளை தவறாமல் பின்பற்றுங்கள். நிச்சயம் ஒரு சில மாதங்களில் முன்னேற்றம் காண்பீர்கள்.

முடியை ட்ரிம் செய்யவும் : மாதம் ஒருமுறை முடியை ட்ரிம் செய்வதால் முடியின் வலிமைஅதிகரிக்கும். இதனால் நுனிப்பிளவு தடுத்து கூந்தல் நீளமாக வளரும்.

முட்டை அவசியம் உபயோகப்படுத்துங்கள் : முட்டையின் வெள்ளைக்கருவிற்கு பாதிப்படைந்த மயிர்கால்களை சரிசெய்யும் குணம் உள்ளது. அதுமட்டுமின்றி, முடியை மென்மையாகவும், பொலிவோடும் வெளிக்காட்டும். ஆகவே வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முடியை நன்கு மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். இதனால் முடி நன்கு வேகமாக வளரும்.
சீப்புகளை பயன்படுத்தவும்: சீப்புகளைக் கொண்டு தலையை சீவும் போது, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். எனவே தினமும் 3-4 முறை தலைக்கு சீப்பை பயன்படுத்துங்கள். இதனால் கூந்தலின் வேர்க்கால்கள் தூண்டப்பட்டு அடர்த்தியாக முடி வளரும்.

ஹேர் ட்ரையரை தவிர்க்கவும் : தலைக்கு குளித்த பின்னர், முடியை உலர வைக்க பலர் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்துவதால், முடியின் ஆரோக்கியமானது பாதிக்கப்படும். அதிலும் இதனை தினமும் பயன்படுத்தினால், விரைவில் வழுக்கைத் தலை ஏற்பட்டுவிடும். ஆகவே எப்போதும் முடியை இயற்கையான வழியில் உலர வையுங்கள்.

உருளைக்கிழங்கு மசாஜ் : முடிக்கு புரோட்டீன் மிகவும் அவசியமானது. அத்தகைய புரோட்டீன்உருளைக்கிழங்கில் உள்ளது. உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலசுங்கள். இதனால் அதில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

வாசனை எண்ணெய்கள் : முடியின் அடர்த்தியை அதிகரிக்க வாசனை எண்ணெய்களான லாவெண்டர் ஆயில், ரோஸ்மேரி ஆயில் போன்றவற்றைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை மசாஜ் செய்ய வேண்டும்.

எண்ணெய் மசாஜ் : வாரம் ஒருமுறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.

வெங்காயச் சாறு : வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.

வினிகர் : வினிகர் கூட ஒரு அற்புதமான கூந்தல் பராமரிப்பு பொருள். அதற்கு வினிகரை நீரில் கலந்து, பின் அந்த கலவையைக் கொண்டு ஸ்கால்ப் மற்றும் முடியை அலசினால், முடியானது பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும்.

கெமிக்கல் கண்டிஷனர் வேண்டாம் : கண்டிஷனர் முடிக்கு நல்லது தான். இருப்பினும் அந்த கண்டிஷனர் ஸ்காப்பில் பட்டால், அது முடியின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே கெமிக்கல் கலந்த கண்டிஷனர் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கையான கண்டிஷனர்களான தயிர், முட்டை, தேன் ஆகியவ்ற்றை பயன்படுத்துங்கள். இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. முடியும் ஆரோக்கியமாக இருக்கும்.

23 1474621291 haircut

Related posts

கூந்தலில் நுரை வந்ததும், அழுக்கு நீங்கிவிட்டதாக எண்ணி முடியினை அலசி விடுகிறோம்

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டும் ஜூஸ்கள்

nathan

அடர் கூந்தலுக்கு அசத்தலான ஹேர் ஸ்பிரே! வெந்தயம் இப்படியும் பயன்படுமா?

nathan

தேங்காய் பாலைக் கொண்டு எப்படி முடி வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்

nathan

சூப்பர் டிப்ஸ்! இளநரையை விரட்டணுமா? அப்ப இதை முயன்று பாருங்கள்…

nathan

ஹேர் ட்ரையரால் முடி உதிர்வதற்கு நாம் செய்யும் இந்த தவறுகள் தான் காரணம் என்று தெரியுமா?

nathan

உங்களுக்கு நல்ல அடர்த்தியான முடியைப் பெற வேண்டுமா…!அப்ப இத படிங்க!

nathan

நரை முடி இருந்தால் என்னவெல்லாம் செய்யக்கூடாது?

nathan

நீளமாவும் அழகாவும் முடி வளர உங்களுக்கு இந்த கோடைகால உணவுகள் உதவுமாம்…!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan