201702111343580977 herbal bath powder for skin SECVPF
சரும பராமரிப்பு

அனைத்து சரும பிரச்சனைகளையும் போக்கும் வாசனை குளியல் பொடி

சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.

அனைத்து சரும பிரச்சனைகளையும் போக்கும் வாசனை குளியல் பொடி
சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது. இவை சருமத்திற்கு போஷாக்கு தருகின்றன. கிருமிகள் அழுக்குகள் தங்காமல் காக்கப்படுகின்றன

தேவையான பொருட்கள் :

சோம்பு – 100 கிராம்
வெட்டி வேர் – 200 கிராம்
சந்தனத் தூள் – 300 கிராம்
கார்போக அரிசி – 200 கிராம்
பூலான்கிழங்கு – 200 கிராம்
பாசிப்பயறு – 500 கிராம்
கஸ்தூரி மஞ்சள் – 100 கிராம்

செய்முறை :

இவைகளை தனித்தனியாக வெயிலில் காயவையுங்கள். பின் ஒன்றன்பின் ஒன்றாக தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக ஈரம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் பூஞ்சை பிடித்துவிடும்.

தினமும் குளிக்கும்போது, தேவையான அளவு எடுத்து நீரில் கலந்து தேய்த்து குளியுங்கள். அவ்வாறு குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும்.

இப்படி தொடர்ந்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும்.

சருமம் அழகு பெறும். இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பூசி குளிக்க வைத்தால் உடல் முழுவதும் ரோமங்கள் வருவதை தவிர்க்கலாம்.201702111343580977 herbal bath powder for skin SECVPF

Related posts

மேலுதட்டில் வளரும் உரோமங்களை போக்கும் வழி

nathan

இப்படித்தான் பயன்படுத்தணும்! மீசை முடி வளர்ச்சியை குறைக்க..

nathan

முதுமையிலும் இளமையாக தெரியனுமா

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பெண்களுக்கான பிகினி வேக்ஸிங் முறைகளில் சிறந்தது எது?

nathan

தெரிஞ்சிக்கங்க…தோல் அழற்சி: நமைச்சல் உள்ள சருமத்திற்கு 5 பயனுள்ள வீட்டு வைத்தியம்..!!!

nathan

வியர்குருவால் கஷ்டப்படுறீங்களா? இதோ அதைப் போக்க சில வழிகள்!

nathan

அழகு குறிப்புகள்:மினுமினுப்பான கழுத்துக்கு….

nathan

கோடையில் சரும எரிச்சலை போக்கும் வழிமுறைகள்

nathan

சரும பிரச்சனைகளை தீர்க்கும் கொத்தமல்லி

nathan