சப்பாத்திக்கு தொட்டு கொள்ள பாலக்கீரை தால் சூப்பராக இருக்கும். இன்று சத்தான சைட் டிஷ் பாலக்கீரை தால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ் பாலக்கீரை தால்
தேவையான பொருட்கள் :
பாலக்கீரை – ஒரு கட்டு,
பாசிப்பருப்பு – 100 கிராம்,
தக்காளி, பச்சை மிளகாய் – தலா ஒன்று,
வெங்காயம் – ஒரு கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
* தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பாலக்கீரையை போட்டு வதக்கி ஆறவைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* பாசிப்பருப்பை வேக வைத்து கீரையுடன் சேர்க்கவும்.
* வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு… கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய், உளுத்தம்பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
* இரண்டும் நன்றாக வதங்கியதும் இதனுடன் கீரை – பருப்பு கலவை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* அடுத்து அதில் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்.
* பாலக்கீரை தால் ரெடி.
* இது சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ். சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.