மாசுக்கள் நிறைந்த இன்றைய மோசமான சுற்றுச்சூழலால் தலையில் அழுக்குகள் அதிகம் சேர்க்கின்றன. இதனால் தினமும் தலைக்கு குளிக்க வேண்டிய நிலையில் இருப்போம். ஆனால் தினமும் தலைக்கு குளித்தால், தலைமுடி உதிரும் என்பதால், பலரும் தலைக்கு குளிக்க முடியாமல் தவிப்பார்கள். அதே சமயம் தலையில் இருந்து துர்நாற்றம் வீசும்.
இப்படி தலையில் இருந்து வீசும் துர்நாற்றத்தைத் தடுக்க தீர்வே இல்லையா என்று பலரும் தேடுவார்கள். அத்தகையவர்களுக்கு இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இங்கு தலையில் இருந்து வீசும் துர்நாற்றத்தைத் தடுக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
பெர்ஃப்யூம் உங்களிடம் இருக்கும் பெர்ஃப்யூமை தலை சீவுவதற்கு முன் தலையில் சிறிது அடித்துக் கொண்டு, பின் சீப்பு கொண்டு தலைமுடியை சீவினால், தலையில் இருந்து வீசும் துர்நாற்றம் தடுக்கப்படும்.
பூ உங்களுக்கு நல்ல மணம் நிறைந்த பூக்களின் வாசனை வேண்டுமானால், தலைக்கு பூ வைத்துக் கொள்ளுங்கள். இதனால் தலையில் இருந்து வீசும் துர்நாற்றம் நீங்கும்.
கண்டிஷனர் இரவில் படுக்கும் முன் லீவ்-ஆன் கண்டிஷனரைத் தடவுங்கள். இதனால் மறுநாள் எழும் போது, தலைமுடி மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
நறுமணமிக்க எண்ணெய்கள் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நீரை நிரப்பி, அத்துடன் சிறிது நறுமணமிக்க லாவெண்டர் அல்லது ரோஸ்மேரி எண்ணெயைக் கலந்து, வெளியே செல்லும் முன் தலையில் ஸ்ப்ரே செய்து கொண்டு, பின் தலையை சீவிக் கொள்ளுங்கள்.
சீரம் நறுமணமிக்க தலைமுடிப் பராமரிப்புப் பொருளான சீரத்தைப் பயன்படுத்தலாம். இந்த சீரத்தை தலைமுடியில் தடவிக் கொண்டால், தலைமுடி நாற்றமடிப்பது தடுக்கப்படும்.