28.5 C
Chennai
Sunday, Nov 24, 2024
eyebrows 13 1476365638
முகப் பராமரிப்பு

அடர்த்தியான புருவம் வேண்டுமா? தினமும் நைட் இத செய்யுங்க…

புருவம் தான் முகத்திற்கு அழகைக் கொடுப்பது. ஒருவருக்கு புருவம் சரியாக இல்லாவிட்டால், அவரது முகத்தின் அழகே மோசமாக வெளிப்படும். எனவே தான் நிறைய பெண்கள் தங்கள் புருவத்திற்கு அதிக பராமரிப்புக்களைக் கொடுக்கிறார்கள்.

சிலருக்கு புருவமே இருக்காது. அத்தகையவர்கள் புருவத்தை வரைந்து கொள்வார்கள். ஆனால் புருவத்தை அடர்த்தியாக வளரச் செய்வதற்கு ஒருசில எளிய இயற்கை வழிகள் உள்ளன. அந்த வழிகளை ஒருவர் தினமும் பின்பற்றி வந்தால், புருவம் அடர்த்தியாக வளரும்.

வெங்காயம்
வெங்காயத்தில் உள்ள சல்பர், இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டும். எனவே ஒரு துண்டு வெங்காயத்தை தினமும் இரவில் படுக்கும் முன் புருவங்களின் மீது 5 நிமிடம் தேய்த்தால், விரைவில் புருவத்தில் நல்ல மாற்றம் தெரியும்.
அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஓர் முறையை தினமும் இரவில் செய்து வந்தால், ஒரே மாதத்தில் புருவங்கள் அடர்த்தியாகி இருப்பதைக் காணலாம்.

தேவையான பொருட்கள்:
விளக்கெண்ணெய் – 10 மிலி
ஆலிவ் ஆயில் – 10 மிலி
வெங்காய சாறு – 20 மிலி
ஆரஞ்சு ஜூஸ் – 20 மிலி

தயாரிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பௌலில் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த பௌலை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை: இந்த கலவையை தினமும் இரவில் படுக்கும் முன் புருவங்களின் மீது தடவி வர வேண்டும். இப்படி ஒரு மாதம் செய்து வந்தால், ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

விளக்கெண்ணெய் இந்த முறையில் சேர்க்கப்பட்டுள்ள விளக்கெண்ணெய் முடியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கு விளக்கெண்ணெயில் உள்ள புரோட்டீன்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம்.

ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஈ வளமாக உள்ளது. இது முடியின் வளர்ச்சியைத் தூண்டும். மேலும் இது முடியின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும்.

eyebrows 13 1476365638

Related posts

கன்னம் அழகாக சில குறிப்புகள்

nathan

சூப்பர் டிப்ஸ்.. முகத்தில் உள்ள கருமை, தழும்பு மறைந்து முகம் வெள்ளையாக மாறிவிடும்

nathan

அழகை சீராக பராமரிப்பதன் மூலம் தான் ஆரோக்கியமான அழகை பெறமுடியும்……

sangika

பளிச்’ முகத்திற்கு முத்தான சில யோசனைகள்!

nathan

இதோ சில டிப்ஸ்… வெயிலில் அதிகம் சுற்றி சருமம் ரொம்ப எரியுதா?

nathan

எண்ணெய் வடியாத சருமம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? தீர்வுகள் இங்கே

nathan

வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஷியல் டிப்ஸ்

nathan

உங்களுக்கு முகமும் இப்படி சுருங்கி கருத்துப்போயிருக்கா? இதை முயன்று பாருங்கள்..

nathan

பாதிப்படைந்த சருமத்தை சரி செய்வதற்கு இயற்கை முறையில் சிகிச்சை…

sangika