27.9 C
Chennai
Monday, Nov 18, 2024
Jsieiui
சிற்றுண்டி வகைகள்

தேங்காய்-ரவா புட்டு

என்னென்ன தேவை?

ரவை – 250 கிராம்,
சர்க்கரை – 1 அல்லது 11/2 கப்,
முழு தேங்காய் – துருவியது,
உப்பு – ஒரு சிட்டிகை,
ஏலக்காய்த்தூள் – சிறிது,
நெய் – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ரவையை உதிர் உதிராக வாசனை வரும்வரை வறுக்கவும். பின் ஆறியதும் தண்ணீரில் உப்பு சேர்த்து தெளித்து பிசிறிக் கொள்ளவும். இத்துடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், துருவிய தேங்காய் கலந்து, சின்னச் சின்ன கிண்ணத்தில் நெய் தடவி, புட்டு மாவை முக்கால் பாகமாக போட்டு இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். சூடான புட்டை வாழைப்பழத்துடன் பரிமாறவும். குறிப்பு: தேங்காய் அதிகம் சேர்ப்பதால் இது தேங்காய்ப் புட்டு. புட்டு வேகவைக்கும் குழாயிலிலும் செய்யலாம்.Jsieiui

Related posts

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேரட் கேக்

nathan

கேழ்வரகுப் பணியாரம்-பாரம்பர்ய உணவுப் பயணம்!

nathan

ஜவ்வரிசி தோசை

nathan

வாழைத்தண்டு சீஸ் பால்ஸ்

nathan

குழந்தைகளுக்கான காலிபிளவர் மசாலா தோசை

nathan

காஞ்சிபுரம் இட்லி

nathan

குழந்தைகளுக்கான ரைஸ் நூடுல்ஸ் பான்கேக்

nathan

அருமையான சமையல் டிப்ஸ்! இதோ உங்களுக்காக!

nathan

சாக்லெட் சுவிஸ் ரோல்

nathan