23.2 C
Chennai
Thursday, Jan 29, 2026
01 1441091333 7 curd 1
முகப் பராமரிப்பு

முகத்தில் உள்ள கருமையான தழும்புகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள்!!!

சருமத்தில் கருமையான தழும்புகள் இருந்தால், அவை அசிங்கமாக தோற்றமளிக்கும். அதிலும் நீங்கள் நல்ல நிறமாக இருந்து, முகத்தில் ஆங்காங்கு கருமையாக இருந்தால், அவை இன்னும் மோசமாக இருக்கும். குறிப்பாக சிலருக்கு கழுத்தில் கருமையாக ஏதோ படர்ந்தது போன்று இருக்கும்.

இப்படி அழகைக் கெடுக்கும் வகையில் உள்ள கருமையைப் போக்க ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அந்த வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் கருமையைப் போக்கலாம்.

அதிலும் லாக்டிக் ஆசிட், சிட்ரிக் ஆசிட் போன்ற ஆசிட்டுகள் நிறைந்த பொருட்களைக் கொண்டு, அந்த கருமையைப் போக்கலாம். சரி, இப்போது அழகைக் கெடுக்கும் வகையில் உள்ள கருமையைப் போக்குவதற்கான வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

எலுமிச்சை

எலுமிச்சையில் சிட்ரிக் ஆசிட் நிறைந்துள்ளது. இத்தகைய எலுமிச்சையின் சாற்றில் சிறிது நீர் கலந்து, அதனை கருமையாக உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையைப் பின்பற்றிய பின், 24 மணிநேரத்திற்கு வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும்.

தயிர்

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் கலந்து, அதனை கருமையாக உள்ள இடத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட், கருமையான தழும்புகளை நீக்கிவிடும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்திலும் எலுமிச்சையில் உள்ளது போன்று சிட்ரிக் ஆசிட் உள்ளது. எனவே அந்த ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து பொடி செய்து, தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் செய்து, கருமையான இடத்தில் தடவி உலர வைத்து கழுவவும்.

பால்

முகத்தில் கருமையான தழும்புகள் இருந்தாலோ அல்லது கழுத்தில் கருமையான படலம் இருந்தாலோ, பாலைக் கொண்டு தினமும் மசாஜ் செய்து உலர வைத்து கழுவி வர, அதில் உள்ள லாக்டிக் ஆசிட், கருமையை விரைவில் மறையச் செய்யும்.

தேன்

தேன் கூட கருமையை மறைய வைக்கும். அதற்கு தேனை கருமை உள்ள இடத்தில் தடவி உலர வைத்து, பின் எலுமிச்சை சாற்றினை தடவி மசாஜ் செய்து உலர வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.

கற்றாழை

கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி உலர வைத்து, பால் கொண்டு முகத்தை துடைத்து எடுத்து, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மில்க் க்ரீம்
01 1441091333 7 curd
மில்க் க்ரீம் நல்ல மாய்ஸ்சுரைசர் மட்டுமின்றி, கருமையான தழும்புகளைப் போக்கவும் உதவும். அதற்கு மில்க் க்ரீம்மை முகத்தில் தடவி மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.

மஞ்சள் தூள்

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1/2 எலுமிச்சையை பிழிந்து, பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி 10 நாட்களுக்கு ஒருமுறை செய்து வர, முகத்தில் உள்ள கருமை நீங்கும்.

Related posts

ஹீரோயின் மாதிரி ஜொலிக்க உங்க பாட்டிகள் சொல்லும் ‘இந்த’ இயற்கை வழிகள

nathan

அழகு குறிப்புகள்:பயத்தம் பருப்பில் பளபளப்பு!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு அழகில் செலுத்தவேண்டிய அக்கறை

nathan

பெண்களே வெயிலால் உங்க சருமம் கருமையாகாம இருக்கணுமா?

nathan

இதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்!…

sangika

இயற்கை முறையில் கரும்புள்ளிகளை நீக்க சில வழி.

nathan

என்றும் பதினாறாக ஜொலிக்க வேண்டுமா? அப்ப கற்றாழை ஃபேஸ் பேக் யூஸ் பண்ணுங்க!

nathan

உங்க சரும சுருக்கம், கரும்புள்ளி மற்றும் பருக்களுக்கு குட்-பை சொல்ல, தினமும் இதால முகத்தை கழுவுங்க. சூப்பர் டிப்ஸ்…

nathan

புருவ முடி வளர்ச்சிக்கு

nathan