தலைமுடி வளர்வதில்லை என்று ஏங்குவோர் பலர். ஆனால் நாம் தற்போது பயன்படுத்தி வரும் ஷாம்பு, கண்டிஷனர்களில் உள்ள கெமிக்கல்களால் தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, தலைமுடி உதிர்கிறதே தவிர வளர்வதில்லை.
இருப்பினும் வீட்டிலேயே நேச்சுரல் ஷாம்பு தயாரித்து, அதைக் கொண்டு தலைமுடியை அலசினால், கெமிக்கல்களால் மயிர்கால்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, தலைமுடியின் ஆரோக்கியம் மேம்படும். இங்கு தலைமுடியின் வளர்ச்சியை வேகமாக்கும் ஓர் நேச்சுரல் ஷாம்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
பேக்கிங் சோடா – 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 9 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
பேக்கிங் சோடாவை தண்ணீர் சேர்த்து கலந்து, வறட்சியான அல்லது ஈரமான தலைமுடியில் தடவி, 1-3 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள அளவு நீளமான முடி உள்ளவர்களுக்கு தான். உங்கள் முடியின் நீளத்திற்கு ஏற்ப பேக்கிங் சோடாவையும், நீரையும் எடுத்து கலந்து பயன்படுத்துங்கள்.
ஆப்பிள் சீடர் வினிகர்
பின்பு 1 பங்கு ஆப்பிள் சீடர் வினிகரை 4 பங்கு நீரில் கலந்து, அத்துடன் வேண்டுமானால் வாசனைமிக்க எண்ணெய் எதையேனும் சேர்த்து தலைமுடியை அலச வேண்டும். பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும். முக்கியமாக இப்படி செய்யும் போது, கண்களில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
குறிப்பு
இந்த முறையின் போது, நுரை ஏதும் வராது. ஆனால் இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வந்தால், உங்கள் தலைமுடியின் தரம் அதிகரித்திருப்பதுடன், தலைமுடியின் வளர்ச்சியிலும் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
பொடுகை போக்க…
நீங்கள் வாங்கியுள்ள ஷாம்புவில் இருக்கும் கெமிக்கல் தலைமுடியை பாதிக்காமல் இருக்க வேண்டுமானால், ஷாம்புவை நீரில் கலந்து, அதோடு சிறிது பேக்கிங் சோடாவை சேர்த்துக் கலந்து பயன்படுத்தினால், பொடுகு உடனே நீங்கி, தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும்.