25.6 C
Chennai
Friday, Sep 19, 2025
01 1475302889 face5 22 1471864400
முகப் பராமரிப்பு

எலுமிச்சை சாற்றினை முகத்திற்குப் பயன்படுத்தலாமா?

எலுமிச்சையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அதிலும் எலுமிச்சை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் பலவித நன்மைகளை வழங்கும்.

ஆனால் இந்த எலுமிச்சை அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது அல்ல. குறிப்பாக சென்சிடிவ் சருமத்தினர் மற்றும் வறட்சியான சருமத்தினர், எலுமிச்சையைப் பயன்படுத்தினால், பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

இதன் காரணமாக பலரது மனதிலும் சரும அழகைப் பராமரிக்க எலுமிச்சையைப் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் எழும். உண்மையில் எலுமிச்சை சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்கும். அதற்கு அதனை சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.

இங்கு எலுமிச்சையை சருமத்திற்கு பயன்படுத்தினால் எந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

முகப்பரு
எலுமிச்சையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தில் பருக்களுக்கு காரணமான பாக்டீரியாக்களை அழித்து, அடிக்கடி பருக்கள் வருவதைத் தடுக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இறந்த செல்களை வெளியேற்றும்
முகம் பொலிவிழந்து காணப்படுவதற்கு காரணம், முகத்தில் உள்ள இறந்த செல்களின் தேக்கம் தான். இந்த இறந்த செல்களை நீக்க எலுமிச்சை பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 எலுமிச்சையை சாறு எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 5 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் மட்டுமின்றி, கை, கால்களிலும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

எண்ணெய் பசை தடுக்கப்படும்
முகத்தில் அதிகம் எண்ணெய் வழிந்தால், அதனைத் தடுப்பதற்கு எலுமிச்சை உதவி புரியும். அதற்கு தினமும் எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அதனை பஞ்சில் நனைத்து, முகத்தைத் துடைத்து எடுத்தால், எண்ணெய் சுரப்பு குறையும்.

கரும்புள்ளிகள் நீங்கும்
முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் கருமையான தழும்புகள் இருந்தால், அதனைப் போக்க சிறந்த பொருள் என்றால் அது எலுமிச்சை தான். அதற்கு எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தினமும் இரவில் படுக்கும் முன் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

மாய்ஸ்சுரைசர்
1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் தேனுடன், 1 எலுமிச்சை சாற்றினை பிழிந்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

பிரகாசமான சருமம்
எலுமிச்சையில் வைட்டமின் சி வளமாக உள்ளது. இது சருமத்தில் கொலாஜென் உற்பத்தியை தூண்டி, சருமத்தைப் பிரகாசமாக்கும். அதற்கு எலுமிச்சை சாறு மற்றும் நீரை சரிசம அளவில் ஒன்றாக கலந்து, இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

01 1475302889 face5 22 1471864400

Related posts

அழகியை போல மின்ன வைக்கும் பாட்டியின் அந்த காலத்து அழகு குறிப்புகள்..! படிக்கத் தவறாதீர்கள்……

nathan

உங்களுக்கு சிறந்த‌ 10 ஆரோக்கியமான முக பேஷியல் குறிப்புகள்

nathan

உங்க சரும சுருக்கம், கரும்புள்ளி மற்றும் பருக்களுக்கு குட்-பை சொல்ல, தினமும் இதால முகத்தை கழுவுங்க. சூப்பர் டிப்ஸ்…

nathan

கன்னத்தை பளபளப்பாக்கும் அழகு குறிப்புகள் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா இதை பயன்படுத்தினால் உதட்டின் கருமை மறையும்..

nathan

சப்போட்டா ஃபேஷியல்

nathan

வீட்டிலேயே ஃப்ரூட் பேசியல் செய்வது எப்படி?

nathan

முகப்பொழிவு தரும் துவரம்பருப்பு

nathan

உங்களுக்கு தெரியுமா முகம் ஜொலிக்க வேறெதுவும் தேவையில்லை… தேங்காய் எண்ணெய் போதும்!!

nathan