29.3 C
Chennai
Wednesday, Jul 23, 2025
prawn pepper fry 23 1469275308 1
அசைவ வகைகள்

ஸ்பைசியான… இறால் பெப்பர் ப்ரை

விடுமுறை நாட்களில் இறால் செய்து சுவைக்க விரும்பினால், இறால் பெப்பர் ப்ரை செய்து சாப்பிடுங்கள். அதுவும் குடைமிளகாய் சேர்த்து சற்று வித்தியாசமான முறையில் சமைத்து மதிய வேளையில் சுவையுங்கள். உங்களுக்கு இறால் பெப்பர் ப்ரை செய்ய தெரியாது என்றால் தொடர்ந்து படியுங்கள்.
ஏனெனில் இங்கு ஸ்பைசியான இறால் பெப்பர் ப்ரை ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1-2 (நீளமாக கீறியது)
கறிவேப்பிலை – சிறிது
குடைமிளகாய் – 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
ஊற வைப்பதற்கு…
இறால் – 20
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு கிண்ணத்தில் போட்டு, ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை அனைத்தையும் சேர்த்து பிரட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இறாலை போட்டு 1 நிமிடம் வறுத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ளவும்.
பின்பு அதே வாணலியில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு அதில் குடைமிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, இறாலையும் போட்டு பிரட்டி விட வேண்டும்.
பின் அதில் கரம் மசாலா சேர்த்து 4-5 நிமிடம் நன்கு பிரட்டி விட்டு, மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், இறால் பெப்பர் ப்ரை ரெடி!!!prawn pepper fry 23 1469275308

Related posts

ருசியான… சிக்கன் பக்கோடா

nathan

சில்லி இறால் வறுவல் : செய்முறைகளுடன்…!

nathan

ஆட்டு ஈரல் பிரட்டல் செய்ய

nathan

சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன்

nathan

முட்டை மசாலா சமையல் குறிப்புகள்

nathan

மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு

nathan

சுவையான ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி

nathan

நாட்டு ஆட்டு குருமா

nathan

ஸ்பெஷல்-ஈசி மட்டன் பிரியாணி,tamil samayal asaivam

nathan