36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சரும பராமரிப்பு

சரும அழகை காக்கும் வாழைப்பழம்

வாழைப்பழம் கருவளையங்கள், தழும்புகளை நீக்கவல்லது. இந்தப் பழத்தில் கொட்டிக்கிடக்கும் அழகு சார்ந்த நன்மைகளை கீழே விரிவாக பார்க்கலாம்.

சரும அழகை காக்கும் வாழைப்பழம்
வாழைப்பழம், `விட்டமின் இ’ சத்து நிறைந்தது. கருவளையங்கள், தழும்புகள் நீக்கவல்லது என்பதோடு, பாதங்களுக்கும் நலம்புரியும். இந்தப் பழத்தில் கொட்டிக்கிடக்கும் அழகு சார்ந்த நன்மைகளை பார்க்கலாம்.

* இரண்டு துண்டுகள் வாழைப் பழத்துடன் இரண்டு டீஸ்பூன் பால் சேர்த்து அரைக்கவும். இதை கண்களைச் சுற்றி அப்ளை செய்து 10 நிமிடங்களுக்கு மசாஜ் கொடுத்து, பின்னர் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர. நாளடைவில் கருவளையங்கள் நீங்கும்.

* வெள்ளரி, தக்காளி, வாழைப் பழம், உருளைக்கிழங்கு. இவை அனைத்தையும் ஸ்லைஸ் செய்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். குளிர்ந்ததும் அவற்றை எடுத்து, மூடிய கண்களின் மேல் ஒவ்வொன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு நிமிடங்களுக்கு வைத்து எடுக்கவும். கணினி திரையில் வேலைசெய்வதால் ஏற்படும் கண் எரிச்சல் நீங்கவும், கண்கள் வறட்சியடையாமல் தவிர்க்கவும் இந்த `ஸ்லைஸ் ட்ரீட்மென்ட்’ கைகொடுக்கும்.

* உடல் இளைப்பவர்கள், பிரசவம் ஆன பெண்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் இவர்களுக்கு எல்லாம் உடலில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் ஏற்படும். நான்கு துண்டுகள் வாழைப்பழத்துடன் இரண்டு டீஸ்பூன் ஓட்ஸ் சேர்த்துக் கலந்து தினமும் அந்தத் தழும்புகள் மேல் தடவி வந்தால், நாளடைவில் மறையும்.

* ஒரு வாழைப்பழத்துடன் கால் கப் உருளைக்கிழங்கு சாறு கலந்து முழு பாதத்துக்கும் `பேக்’ போடவும். ஒரு மணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவினால். வெடிப்பு, சொர சொரப்பு நீங்கிய மிருதுவான பாதங்கள் உங்களுக்கு சொந்தம்.

* ஒரு வாழைப்பழம், இரண்டு டீஸ்பூன் பால், கால் டீஸ்பூன் பயத்த மாவு, கால் டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் சந்தனம். இவை அனைத்தையும் ஒன்றாகக் கலக்கவும். உடலில் முதலில் நல்லெண்ணெய் மசாஜ் கொடுத்து, பின்னர் இந்தக் கலவையை அப்ளை செய்து, மசாஜ் கொடுத்து குளிக்கவும். இவ்வாறு செய்தால் சரும நிறம் சீராக இருக்கும்; ஆங்காங்கே கறுப்பாக மாறுவதைத் தவிர்க்கலாம். இதை வாரம் ஒரு முறை செய்யலாம்.

* நான்கு துண்டுகள் வாழைப்பழம், நான்கு துண்டுகள் பப்பாளி, இரண்டு டீஸ்பூன் பாதாம் பொடி, கால் கப் தேங்காய்ப்பால், சிறிது குங்குமப்பூ. இவை அனைத்தையும் ஒன்றாகக் கலக்கவும். முழு கழுத்துக்கும் அதை `பேக்’ போட்டு அலசவும். தைராய்டு பிரச்சனையால் கழுத்து கருப்பு அடைந்தால், இது நீக்கும். மேலும், இடுப்புப் பகுதியில் உள்ளாடை காரணமாக ஏற்படும் கருப்படைதலையும் இது போக்கும்.

Related posts

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஆரஞ்சு தோல் ஃபேஸ் பேக்

nathan

மருதாணியில் அழகும் ஆரோக்கியமும்

nathan

இந்த சிகிச்சையை அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் உள்ள மயிர்கால்கள் தளர்ந்து, உதிர்ந்துவிடும்.

nathan

beauty tips in tamil ,டல் சருமத்தையும் டாலடிக்கச் செய்யலாம்!

nathan

சோர்வை போக்கி சருமத்தை பொலிவாக்கும் வழிமுறைகள்

nathan

அழகை பராமரிக்க தயிரை எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம்…?

nathan

சரும பிரச்சனைகளை தீர்க்கும் மஞ்சள் மாஸ்க், tamil beauty tips

nathan

கால்களில் இருக்கும் முடியை அகற்றுவதற்கு இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள்!…

sangika

சோடா உப்பினைக் கொண்டு அழகுக் குறிப்புகள் சில!

nathan