29.5 C
Chennai
Friday, May 23, 2025
28 1475024949 1amazinghomemadefacepacksforremovingskintan
முகப் பராமரிப்பு

ஒரே வாரத்தில் முகம், கை, கால்களில் இருக்கும் கருமையைப் போக்க வேண்டுமா?

என்ன தான் மழைக்காலமாக இருந்தாலும், அடிக்கும் வெயிலின் தாக்கத்தில் மட்டும் குறைவேதும் இல்லை. சருமம் பொசுங்கும் அளவில் வெயில் கொளுத்துகிறது. இதனால் சருமம் மிகவும் கருமையாகிறது. இதனைத் தடுப்பதற்கு சருமத்திற்கு போதிய பாதுகாப்பை அன்றாடம் வழங்க வேண்டியது அவசியம்.

இதற்கு சருமத்தை குளிர்ச்சியாகவும், சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில ஃபேஸ் பேக்குகளை அவ்வப்போது போட வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட சரும செல்கள் புத்துயிர் பெற்று, சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

இங்கு முகம், கை, கால்களில் உள்ள கருமையைப் போக்கும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி உங்கள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

குங்குமப்பூ மற்றும் பால்
4-5 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பாலுடன், சிறிது குங்குமப்பூ சேர்த்து, அதோடு, 2-3 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து, முகம், கை, கால்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையைப் போக்கலாம்.

வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி
வெள்ளரிக்காய் சிறிதை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் சிறிது தக்காளி சாறு, சிறிது மஞ்சள் தூள், தேன், எலுமிச்சை சாறு, தயிர் சேர்த்து நன்கு கலந்து, சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

கடலை மாவு மற்றும் மஞ்சள்
2 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல், 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தயிர், தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன் தயிருடன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு சேர்த்து ஒன்றாக கலந்து, சருமத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். பின்பு சிறிது மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.

எலுமிச்சை மற்றும் கற்றாழை சிறிது கற்றாழை ஜெல்லுடன், 2-3 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், சரும கருமை விரைவில் அகலும்.

முட்டைக்கோஸ் மற்றும் மஞ்சள் சிறிது முட்டைக்கோஸை அரைத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன், 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து, சருமத்தில் கருமையாக இருக்கும் பகுதியில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். முக்கியமாக இந்த பேக் போட்ட பின் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.

சர்க்கரை மற்றும் எலுமிச்சை 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரையுடன், 1 துளி ஆலிவ் ஆயில் மற்றும் 2-3 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் நன்கு கழுவ வேண்டும்.

28 1475024949 1amazinghomemadefacepacksforremovingskintan

Related posts

பெண்கள் தங்கள் சருமத்தை மேலும் அழகுபடுத்த! டிப்ஸ்!

nathan

முகம் பளபளக்க/ Kasthuri Manjal

nathan

அழகு கிரீம்கள் நிரந்தர நிறத்தை தருமா?

nathan

பழவகை ஃபேஷியல்

nathan

Kadalai Maavu Beauty Tips in Tamil!!

nathan

பளிச்சென மின்ன வேண்டுமா?

nathan

நீங்கள் ஒரே ராத்திரியில நீங்க இப்படி சிகப்பாகணுமா? அப்ப இத படியுங்க…

nathan

நெற்றியில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குவதற்கான 6 எளிய வழிகள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

முகத்திற்கு இளமையும், பளபளப்பும்

nathan