வறண்ட கூந்தல் அசௌகரியமாகத்தான் இருக்கும். எண்ணெய் தடவினாலும் சில மணி நேரங்களில் வறண்டு, கூந்தல் கடினமாக இருக்கும் .
அதோடு சீவும்போது நிறைய முடி உதிர்தல், அரிப்பு ஏற்படுதல் , பொடுகு உண்டாதல் எல பலப் பிரச்சனைகளைத் தரும். இதில் நமது இயற்கையான மலர்களின் நறுமணங்களில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. அவை கூந்தலின் பிரச்சனைகளை போக்கி, பலவிதமான பலன்களை தருகிறது. இந்த குறிப்புகளை பயன்படுத்தி அதன் முழுப் பலன்கலை பெறுங்கள்.
ரோஜா ஹேர் மாஸ்க் :
முட்டை – 2
ரோஜா இதழ்கள் – அரை கப்
பாதாம் எண்ணெய் – 4 டீஸ்பூன்
ரோஜா இதழை அரைத்து அரைக் கப் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதில் அடித்த முட்டை இரண்டு மற்றும் பாதாம் எண்ணெயை கலந்து தலையில் த்டவுங்கள். 45 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும். பிறகு பாருங்கள். கூந்தலின் வாசம் மட்டுமில்லாமல் அடிக்கடி தொட்டுப் பார்க்கும் அளவிற்கு பட்டு போலிருக்கும்.
சாமந்தி ஹேர் வாஷ் :
10 சாமந்தி பூவின் இதழ்களை 1 லிட்டர் நீரில் கொதிக்க விடுங்கள். அடுப்பை அணைத்து ,அதில் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயையும் சேர்த்து, 1 மணி நேரம் அதனை அப்படியே மூடி வைத்திருங்கள்.
அதன் பிறகு அதனை வடிகட்டி, அந்த நீரை கண்டிஷனராக உபயோகப்படுத்தலாம். தலைக்கு குளித்ததும் இறுதியாக இந்த ஹேர் வாஷைக் கொண்டு தலையை அலசுங்கள். அதன் பின் தலையை அலச வேண்டியதில்லை. இது கூந்தலை பலப்படுத்தும்.
பூக்களின் மாஸ்க் :
இது முழுக்க பழம் மற்றும் பூக்களைக் கொண்டு உருவாக்கும் இந்த மாஸ்க் மிகவும் அற்புதத்தையும் நம்ப முடியாத அளவிற்கு அற்புதத்தையும் தரும்.
இது முழுக்க பழம் மற்றும் பூக்களைக் கொண்டு உருவாக்கும் இந்த மாஸ்க் மிகவும் அற்புதத்தையும் நம்ப முடியாத அளவிற்கு அற்புதத்தையும் தரும்.
தேவையானவை :
செம்பருத்தி இதழ் – 10
பிரியாணி இலை – 10
வாழைப்பழம் – 1
ஆலிவ் எண்ணெய் – 1
முட்டை – 1
செம்பருத்தி மற்றும் பிரியாணி இலையை நன்ராக அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் மசித்த பழம் முட்டை , ஆலிவ் என்ணெய் கலந்து தலையில் தடவி 1 மணி நேரம் ஊற விடுங்கள்.பின்னர் குளிக்கலாம்.
செம்பருத்தி இதழ் – 10
பிரியாணி இலை – 10
வாழைப்பழம் – 1
ஆலிவ் எண்ணெய் – 1
முட்டை – 1
செம்பருத்தி மற்றும் பிரியாணி இலையை நன்ராக அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் மசித்த பழம் முட்டை , ஆலிவ் என்ணெய் கலந்து தலையில் தடவி 1 மணி நேரம் ஊற விடுங்கள்.பின்னர் குளிக்கலாம்.
அவகாடோ மாஸ்க் :
அவகாடோ மசித்தது – 1
தேன் – 2 ஸ்பூன்
திரிபலா பொடி – 2 ஸ்பூன்
முட்டை – 2
முட்டையை நன்றாக அடித்து, அதனுடன் மசித்த அவகாடோ, தேன், திரிபலா கலந்து தலையில் ஸ்கால்ப்பில் தடவுங்கள். மீதமிருப்பதை நுனி வரை தடவி ஒழுகாமலிருக்க தலையில் ஷவர் கேப் போட்டுக் கொள்ளுங்கள். 1 மணி நேரம் குளித்து தரமான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசவும்.
வறட்சியை தவிர்க்க :
எண்ணெய் வைப்பது வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். வறண்ட கூந்தல் உடையவர்கள் தினமும் ஸ்கால்ப்பில் எண்ணெய் வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெயை சம அளவு எடுத்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் 1 ஸ்பூன் அளவு எடுத்து ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்யவும். இதனால் கூந்தல் வறண்டு போகாமல் தடுக்க முடியும்.
அதேபோல், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், மற்றும் நல்லெண்ணெயை சம அளவு எடுத்து எண்ணெய் குளியல் வாரம் இருமுறை செய்தாக வேண்டும். இதனால் முடி உதிர்தல் பொடுகு ஆகியவற்றை தடுக்க முடியும்.